அந்த விசயத்தில் நயன்தாரா, அனுஷ்காவை ஓரங்கட்டிய திரிஷா!! எல்லாம் விஜய் கொடுத்த வாய்ப்பு..
தமிழ் சினிமாவில் இரு துருவ நட்சத்திரங்களாக ஒருவொரு காலத்திற்கேற்ப இருப்பார்கள். அப்படி ரஜினி - கமலுக்கு அடுத்து விஜய் - அஜித் இருந்து வருகிறார்கள்.
இந்த நான்கு நடிகர்களின் படங்களில் நடிக்க சின்ன குழந்தை முதல் வயதான நடிகர் நடிகைகள் வரை வாய்ப்புக்காக ஏங்குவார்கள். ஆனால் இந்த நான்கு நடிகர்களின் படங்களில் நடிக்க சமீபத்தில் கமிட்டாகி இருக்கிறார் நடிகர் திரிஷா.
மார்க்கெட் இழந்த நிலையில் பொன்னியின் செல்வன் படம் மூலம் தன்னுடைய மார்க்கெட்டை ஸ்ட்ராங்காக்கியுள்ளார். அப்படி விஜய்யின் லியோ படத்தில் நடித்தும் அஜித்தின் விடாமுயற்சி படத்திலும் கமல் ஹாசனின் KH234 படத்திலும் நடிக்க கமிட்டாகி இருக்கிறார்.
ஏற்கனவே ரஜினிகாந்துடன் பேட்ட படத்திலும் நடித்துள்ளார். அப்படி டாப் 4 மார்க்கெட் அதிகமுள்ள நடிகர்கள் படங்களில் திரிஷா மட்டுமே நடித்துள்ளார். ஆனால் ரஜினி, விஜய், அஜித் படத்தில் மட்டுமே நடிகை நயன் தாரா, அனுஷ்கா நடித்திருக்கிறார்கள்.
அதேபோல் இந்த வாய்ப்பு நடிகை சமந்தா, தமன்னாவுக்கு கூட கிடைக்கவில்லை. மேலும் தனுஷ், சல்மான் கான் உள்ளிட்ட பல நடிகர்களுக்கு ஜோடியாகவும் நடிக்கவுள்ளார் நடிகை திரிஷா.
