நான் நல்ல பொண்ணு இல்லை..பிரபல காதல் ஜோடியை சேர்த்து வைத்திருக்கிறாரா திரிஷா...

Trisha Gossip Today Ponniyin Selvan 2 Aarti Ravi Ravi Mohan
By Edward Apr 03, 2026 11:30 AM GMT
Report

திரிஷா

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை திரிஷா, நடிகர் விஜய்யுடன் சமீபத்தில் திருமண நிகழ்ச்சியொன்றில் ஒரே நிறத்தில் ஆடையணிந்து சென்றது பலரது கவனத்தையும் ஈர்த்து சர்ச்சையானது. இதனையடுத்து திரிஷா குறித்து பல விஷயங்கள் செய்திகளாக இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

அந்தவகையில் நடிகை திரிஷா பொன்னியின் செல்வன் படத்தின் வெளியீட்டிற்காக கொடுத்த பேட்டி ஒன்று இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

நான் நல்ல பொண்ணு இல்லை..பிரபல காதல் ஜோடியை சேர்த்து வைத்திருக்கிறாரா திரிஷா... | Trisha Krishnan Video About Lovers Goes Viral

அந்த பேட்டியில், நிஜ வாழ்க்கையில் நீங்கள் பிரித்து வைத்த காதல் கதை ஏதும் இருக்கா என்று திரிஷாவிடம் கேட்கபட்டது. அதற்கு திரிஷா, சேச்சே சத்தியமா இல்லை என்று சொல்ல, கேள்வி கேட்ட கனி, நான் நல்ல பொண்ணு அப்படின்னு சொல்றீங்களா என்று கேட்டுள்ளார்.

அதற்கு திரிஷா, நான் நல்ல பொண்ணுலாம் கிடையாது, ஆனால் மத்தவங்க காதல் கதையில் எனக்கு பிசினஸ் இல்லை. சொல்லப்போனால் காதலை சேர்த்து வைத்திருக்கிறேன் என்று திரிஷா சொல்ல அதற்கு பக்கத்தில் இருந்த ரவி மோகன், அதில் நானும் ஒருத்தன் என்று கூறியிருக்கிறார். அப்படியானால் ரவி மோகன் - ஆர்த்தி காதலை திரிஷா தான் சேர்த்து வைத்திருக்கிறாரோ என்ற கேள்வியும் தற்போது எழுந்து வருகிறது.