த்ரிஷாவை அப்படி பண்ணனும்.. அருவருப்பாக பேசிய மன்சூர் அலி கான்.. கொந்தளித்த த்ரிஷா

Trisha
By Parthiban.A Nov 18, 2023 05:17 PM GMT
Report

நடிகர் மன்சூர் அலி கான் சர்ச்சையான பேச்சுக்கு பெயர் போனவர். அவ்வப்போது எதாவது பேசி சர்ச்சைகளில் சிக்கும் அவர் தற்போது த்ரிஷா பற்றி பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

150 படங்களில் வில்லனாக பல அட்டூழியங்கள் செய்திருக்கிறேன். இப்போ என்னை வில்லனாக நடிக்க வைக்க மாட்டேங்குறாங்க. லியோ படத்தில் த்ரிஷாவுடன் நடிக்கிறேன் என்றதும் நிச்சயம் ஒரு பெட் ரூம் சீன் இருக்கும், அவரை தூக்கி கட்டிலில் போடலாம் என நினைத்தேன். ஆனால் லியோ ஷூட்டிங்கில் அவரை என் கண்ணில் கூட காட்டவில்லை என மன்சூர் அலி கான் கூறி இருக்கிறார்.

த்ரிஷாவை அப்படி பண்ணனும்.. அருவருப்பாக பேசிய மன்சூர் அலி கான்.. கொந்தளித்த த்ரிஷா | Trisha Reacts To Mansoor Ali Khan Sexist Speech

மன்சூர் பேசிய இந்த அருவருப்பான வீடியோவை பார்த்துவிட்டு கடும் கோபமாக த்ரிஷா ஒரு பதிவை போட்டிருக்கிறார்.

இவர் பேசி இருப்பது மிகவும் ஆபாசமான, அவமரியாதையான, பெண்களுக்கு எதிரான, அருவருப்பான, மோசமான ஒரு பேச்சு.

இவரை போன்ற ஒரு ஆளுடன் நான் நடிக்காதது எனக்கு நல்லது, என் வாழ்க்கையில் இனியும் இவரை போன்ற ஒருவருடன் நடிக்க மாட்டேன்.