அந்த படத்திற்கு பின் விஜய்யுடன் அப்படியொரு உறவு ஏற்பட்டது!! உண்மையை உடைத்த திரிஷா
பொன்னியின் செல்வன் படத்திற்கு பின் நடிகை திரிஷா சினிமாவில் பிஸியாக வலம் வருகின்றார். சினிமாவில் மட்டுமின்றி சமூக வலைத்தளங்களில் அப்படி சென்சேஷனலாக இருக்கிறார்.
அதற்கு காரணம் அவர் மீது எழும் விமர்சனம்.. நடிகர் மன்சூர் அலி கான் திரிஷாவை அவதூறாக பேசிய விஷயம் சமூக வலைத்தளங்களில் பெருசாக வெடிக்க.. எப்படியோ அந்த பிரச்சனை முடிந்தது என்று பார்த்தல் அரசியல்வாதி ஒருவர், திரிஷாவை மோசமாக பேசி இருந்தார். சமீபத்தில் அந்த பிரச்சனையும் ஓய்ந்துள்ளது.
இந்த நிலையில் நடிகை திரிஷா அளித்த பழைய பேட்டி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவர் விஜய் குறித்து பேசியிருக்கிறார்.
அவர் கூறியதாவது, "நானும் விஜய்யும் இதுவரை பல திரைப்படங்களில் சேர்ந்து நடித்து இருக்கிறோம். ஆனால், கில்லி படத்திற்கு முன் நாங்கள் இப்படி இல்லை. அனைவரும் கூறுவது போல் விஜய் மிகவும் அமைதியான ஒரு நபர். கில்லி படத்திற்க்கு பின் தான் நாங்கள் நல்ல நண்பர்களாக மாறினோம்" என்று திரிஷா தெரிவித்துள்ளார்.