மதுவுக்கு அடிமை! திரிஷா வாழ்க்கையை புரட்டி போட்ட நடிகர்கள்! இந்த லிஸ்டில் இவரா?

vijay simbu trisha dhanush tamilactress rana
By Edward Feb 23, 2022 02:36 AM GMT
Report

தன்னுடைய சினிமா வாழ்க்கையை 200 ஆண்டுகளுக்கு மேலாக பயணித்த நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை திரிஷா. ஜோடி படத்தின் மூலம் ஆரம்பித்து தற்போது வரை ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து வருகிறார். சமீபகாலமாக படவாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகிறார். இதற்கு காரணம் இடையில் நிச்சயம், காதல் என சிக்கி சின்னாப்பின்னமானது தான்.

அப்படி நடிகை திரிஷாவை காதல் வலையில் சிக்க வைத்து அவரின் வாழ்க்கையை புரட்டி போட்ட நடிகர்களின் லிஸ்ட்டை பார்ப்போம். நடிகை திரிஷாவிற்கு கெமிஸ்டி ஒர்க்கவுட் ஆகும் நடிகர் என்றால் அது விஜய் தான். கில்லி, திருப்பாசி, ஆதி, குருவி போன்ற படங்களில் இணைந்து பணியாற்றிய போது இருவருக்கும் காதல் ஏற்பட்டது என்று செய்திகள் பரவியது. இருவரும் ஒரே கேரவனை பயன்படுத்தினார்கள் என்று படப்பிடிப்பில் அத்துமீறி கொஞ்சிக்கொள்வார்கள் என்றும் பத்திரிக்கையில் செய்திகள் கிசுகிசுக்கப்பட்டது.

திரிஷாவின் வாழ்க்கையில் மிகப்பெரிய இடி விழ காரணமாக இருந்தவர் ராணா. மேடையில் கூட சென்னை வந்தால் திரிஷா வீட்டிற்கு தான் முதலில் செல்வேன் என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார் நடிகர் ராணா. அப்படியொரு காதலில் இருவரும் ஜோடியாக சுற்றித் திரிந்தனர்.

ஜெஸ்ஸி ஜெஸ்ஸி என்று படம் முழுக்க புலம்பி வந்த நடிகர் சிம்புவும் இந்த லிஸ்ட்டில் இருக்கிறார். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் போது இருவருக்கும் இருந்த கெமிஸ்டியை பார்த்து அவர்களின் வீட்டாரே இது காதல் தான் என்று நம்பினார்கள்.

இது ஆரம்பித்து சில காலமே தொழிலதிபருடன் காதல் என்று திரிஷா செல்ல நிச்சயம் வரை சென்று திருமணம் நின்றுள்ளது. இதற்கு காரணமே திரிஷாவின் பிளாஸ்பேக் காதல் கதை தானாம். தன்னுடன் நடித்த நடிகைகளை தன் வலையில் சிக்க வைப்பது நடிகர் தனுஷின் தீராத வேலையாக இருந்தது.

கொடிப்படத்தின் போது இருவரும் நெருக்கமாக பழகி வந்தார்கள் என்று கூட செய்திகள் பரவியது. இடையில் பல நடிகர்கள் நட்சத்திரங்களுடன் சேர்ந்து மது பார்ட்டியிலும் கலந்து கொண்ட புகைப்படம் லீக்கானது. இப்படியெல்லாம் நடிகை திரிஷா மாட்டிக்கொண்டு தன்னுடைய மார்க்கெட்டையே இழந்து விட்டார். தற்போது படங்களில் கவனம் செலுத்துவோம் என்று இருந்து வருகிறார்.