பள்ளி உடையில் நடிகை த்ரிஷா.. இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ
40 வயதுக்கு மேலாகியும் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பயந்துகொண்டு இருக்கிறார் நடிகை த்ரிஷா. கிட்டத்தட்ட 21 ஆண்டுகளாக சினிமாவில் பயணித்து வரும் இவர் இன்றும் அஜித், சூர்யா என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துக்கொண்டு இருக்கிறார்.
அடுத்ததாக இவர் நடிப்பில் குட் பேட் அக்லி, தக் லைஃப், சூர்யா 45 ஆகிய படங்கள் வெளிவரவுள்ளது. ஹீரோக்களுக்கு ஜோடியாக மட்டுமின்றி சோலோ ஹீரோயினாகவும் த்ரிஷா கலக்கிக்கொண்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்கள் பலரும் பார்த்திராத நடிகர், நடிகைகளின் புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாவது வழக்கம் தான். அந்த வகையில் தற்போது நடிகை த்ரிஷாவின் பள்ளி பருவ புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
பள்ளி உடையில் தனது தோழிகளுடன் நடிகை த்ரிஷா எடுத்துக்கொண்ட இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..