15 ஆண்டுகளாக விஜய்-ஐ வேண்டாம் என ஒதுக்கிய திரிஷா!! மறைமுகமாக வலையில் சிக்கிய சம்பவம்
தமிழ் சினிமாவில் ஜோடி படத்தில் தோழி கதாபாத்திரம் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை திரிஷா. மிஸ் சென்னை பட்டத்தை வென்ற பிறகு சூர்யாவின் மெளனம் பேசியதே படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார்.

நடிகை திரிஷா
அதன்பின் தமிழ், தெலுங்கு மொழிகளில் கொடிக்கட்டி பறந்து 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து வந்தார். இடையில் காதல் தோல்வி, நிச்சயம் வரை சென்ற திருமணம் என பல பிரச்சனைகளை சந்தித்து மார்க்கெட்டை இழந்தார்.
அதன்பின் 96 படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்து நடித்து வரும் திரிஷா சமீபத்தில் பொன்னியின் செல்வன், ராங்கி படங்களில் நடித்திருந்தார்.
சமீபத்தில் ராங்கி படத்தின் பிரமோஷனுக்காக பேட்டிக்கொடுத்திருந்த போது வெளியாகி இருக்கும் வாரிசு, துணிவு படத்தில் எந்த படத்தை பார்க்கப்போகிறீர்கள் என்றும் விஜய்யின் 67 வது படத்தில் நடிக்கப்போகிறீர்களா? என்ற கேள்விக்கும் பதிலளிக்காமல் அமைதியாகினார்.

தளபதி 67
இந்நிலையில் நடிகை திரிஷா இன்று காலை 4 மணிக்கு வெளியான விஜய்யின் வாரிசு படத்தினை வெற்றி திரையரங்கில் ரசிகர்களுடன் பார்த்து மகிழ்ந்தார்.
ஏற்கனவே அஜித்தின் 62 வது படத்திலும் தளபதி விஜய்யின் 67வது படத்தில் நடிக்கப்போவதாக செய்திகள் வெளியான நிலையில், 15 ஆண்டுகளாக விஜய்யை ஒதுக்கி வரும் விஜய் படத்தில் நடிக்கப்போவதை மறைமுகமாக அறிவித்திருப்பதாக கூறி வருகிறாகள்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திரிஷாவிடம் பேச்சு வார்த்தை நடத்தி இருப்பதாகவும் கூடிய சீக்கிரம் பேசலாம் என்றும் திரிஷா பேட்டியில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
#VarisuFDFS-ல் Thalapathy @actorvijay-யை பார்த்து ரசித்த @trishtrashers .!#varisu #ranjithame #trisha #ranjithame #fdfs pic.twitter.com/ifJ4NGEzCH
— SS Music (@SSMusicTweet) January 11, 2023