திரிஷா போட்ட ஒரேவொரு போட்டோ..இது தேவையா? கொந்தளிக்கும் ரசிகர்கள்..

Trisha Gossip Today Indian Actress Tamil Actress
By Edward Apr 04, 2026 12:15 PM GMT
Report

திரிஷா

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை திரிஷா, நடிகர் விஜய்யுடன் திருமண நிகழ்ச்சி ஒன்றிற்கு ஜோடியாக சென்ற விவகாரம் பெரியளவில் பேசப்பட்டது. அதன்பின் திரிஷா சோசியல் மீடியா பக்கங்களில் பதிவிடும் போஸ்டர்கள் அதிகமாக கவனத்தை ஈர்த்து வருகிறது.

திரிஷா போட்ட ஒரேவொரு போட்டோ..இது தேவையா? கொந்தளிக்கும் ரசிகர்கள்.. | Trisha Sparks Controversy Temple Photo With Dog

சில நாட்களுக்கு முன் தன்னுடைய செல்லப்பிராணி நாயான இஸ்ஸியுடன் கோவிலுக்கு சென்றது விமர்சிக்கப்பட்டது. இஸ்ஸியை முதன்முறையாக கோவிலுக்கு அழைத்து சென்று, இஸ்ஸியின் முதல் கோவில் விஜயம் என்ற கேப்ஷனை போட்டது தான் சர்ச்சை.

இஸ்ஸியை தன்னுடைய மகளாகவே பார்க்கும் திரிஷா, நாயின் பெயருடன் தன் அப்பாவின் பெயரான கிருஷ்ணனை சேர்த்து இஸ்ஸி கிருஷ்ணன் என்று அழைத்து வருகிறார்.

திரிஷா போடும் ஒவ்வொரு பதிவும் அதிக கவனத்துடன் ஈர்க்கப்படுவதால் திரிஷாவின் இந்த பதிவு இணையத்தில் பகிரப்பட்டு நெட்டிசன்களால் விமர்சிக்கப்பட்டும் வருகிறார்.

ஏற்கனவே பிரச்சனை பல போய்க்கொண்டிருக்கும்போது இந்த நேரத்தில் இது தேவையா என்ற கேள்விகளையும் ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

GalleryGallery