நடிகருடன் காதல் உறவை முறித்த திரிஷா.. 40 வயதாகியும் திருமணம் ஆகாமல் இருப்பது இதனால் தானா?
2002 -ம் ஆண்டு வெளியான மௌனம் பேசியதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான நடிகை திரிஷா. சமீபத்தில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்து அனைவரின் மனதையும் கவர்ந்தார்.
தற்போது 40 வயதான திரிஷா தனது பிறந்த நாளை நண்பர்களுடன் கொண்டாடினார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற திரிஷாவிடம் தொகுப்பாளர் திருமணம் குறித்து கேள்வி கேட்டுள்ளார்.
அதற்கு பதில் அளித்த அவர், எல்லாரும் 30 வயதிற்குள் திருமணம் செய்து செட்டில் ஆகவேண்டும் என்று நினைகிறார்கள். இது தவறான விஷயம். எல்லாருக்கும் 30 வயதிற்கு மேல் தான் ஒரு தெளிவு வருகிறது இதன் பின்னர் துணையை தேடுவது தான் சரியான செயல். என்னுடைய நண்பர்கள் பல பேர் திருமணம் செய்து கொண்டு கஷ்டப்படுகிறார்கள் என்று கூறியுள்ளார்.
திரிஷா நடிகர் ராணாவுடன் லிவிங் டுகெதரில் இருந்தார்களாம் ஆனால் அவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்ததாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.