தயாரிப்பாளருடன் த்ரிஷாவிற்கு நடந்த நிச்சயதார்த்தம்.. ஆனால், திருமணம் நடக்கவில்லை! காரணம் என்ன தெரியுமா
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் த்ரிஷா. 42 வயதை கடந்துள்ள இவர், இன்று வரை சிங்கிளாக இருக்கிறார். ஆனால், இவருக்கு ஒருமுறை திருமணம் நடக்கவிருந்த நின்றுபோனது. அதுகுறித்து தற்போது ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.
நடிகை த்ரிஷாவிற்கும் தயாரிப்பாளர் வருண் மணியனன் என்பவருக்கும் 2015ம் ஆண்டு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால், திருமணம் நடக்கவில்லை.
இந்த திருமணம் நடக்காது என த்ரிஷா கூறிவிட்டார். இந்த நிலையில், பல ஆண்டுகளுக்கு முன் அளித்த பேட்டி ஒன்றில் அதற்கான காரணத்தை நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது "எனது திருமணத்தை நிறுத்திவிட்டேன். திருமணத்திற்கு பின் படங்களில் நடிக்க கூடாது என எனக்கு கணவராக வரவிருந்தவர் கூறினார். ஆனால், நான் நடிப்பை நிறுத்துவதற்கு பதில் திருமணத்தை நிறுத்திவிட்டேன். கர்ப்பமானால் மட்டுமே பிரேக் எடுப்பேன், அதுவும் சினிமாவில் இருந்து விலக மாட்டேன்" என கூறியுள்ளார்.