நண்பர்களுடன் வெக்கேஷன் சென்றுள்ள திரிஷா.. கடற்கரையில் எடுக்கப்பட்ட புகைப்படம்
திரிஷா
இன்றைய தேதியில் அதிக சம்பளம் வாங்கும் முன்னணி நடிகையாக ஜொலித்து கொண்டு இருக்கிறார் திரிஷா. தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் பிசியாக நடித்து வருகிறார்.
சமீபத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த கோட் படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடி பட்டையை கிளப்பிய நடிகை திரிஷா, அஜித்துடன் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி. கமலின் தக் லைஃப் ஆகிய தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் மலையாளத்தில் மோகன்லாலின் ராம் படம், டோவினோ தாமஸ் உடன் ஐடென்டிட்டி, தெலுங்கில் சிரஞ்சீவியுடன் விஸ்வம்பரா என திரிஷாவின் லைன் அப் வேற லெவல்.
இந்த நிலையில், பிசியாக நடித்து வரும் திரிஷா அதிலிருந்து பிரேக் எடுத்துக்கொண்டு, தனது நண்பர்களுடன் வெக்கேஷன் சென்றுள்ளார். போட், கடற்கரை என பல்வேறு இடங்களில் எடுக்கப்பட்ட திரிஷாவின் வெக்கேஷன் ட்ரிப் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

