அமெரிக்க அதிபர் டிரம்ப் வைத்த ஆப்பு.. தமிழ் படங்களின் வசூலுக்கு வந்த பெரிய ஆபத்து
Rajinikanth
Vijay
Donald Trump
By Bhavya
டிரம்ப்
அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பு தற்போது தமிழ், தெலுங்கு உட்பட இந்திய சினிமா துறையினருக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
அதாவது, வெளிநாட்டு திரைப்படங்களை அமெரிக்காவில் ரிலீஸ் செய்தால் 100% சுங்க வரி என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
மேலும் அமெரிக்க படங்கள் வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்டால் அதற்கும் 100% வரி என டிரம்ப் அறிவித்து இருக்கிறார்.
ஆபத்து
இந்நிலையில், RRR, புஷ்பா 2, ஜெயிலர், லியோ, கேஜிஎஃப் 2 போன்ற பெரிய பட்ஜெட் படங்கள் இந்தியாவை போல் அமெரிக்காவிலும் சக்கைப்போடு போட்டன.
தற்போது 100 சதவீத வரி விதிப்பால் அப்படத்தை அமெரிக்காவில் வெளியிடுவதை கருத்தில் கொண்டு அதற்கான பட்ஜெட்டும் அதிகரிக்கும் சூழல் உருவாகி இருக்கிறது. இதனால் தமிழ், தெலுங்கு படங்களின் வசூல் அங்கு பெரிய அளவில் பாதிப்பை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.