22 வருட திருமண வாழ்க்கையில் விஜய், சங்கீதா விவாகரத்து!! பிள்ளைகளுக்காக விஜய் எடுக்க போகும் முடிவு
விஜய் தன் படங்களில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு எப்போதும் தன மனைவி சங்கீதாவை கூட்டிச்செல்வது வழக்கம். ஆனால் வாரிசு ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு அவர் வராதது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
சர்ச்சைகளும் - விவாகரத்தும்
ஏற்கனவே தன் பெற்றோர்களை விஜய் கைவிட்டுவிட்டார் என்ற சர்ச்சைகளும் விமர்சனங்களும் எழுந்து வந்தது. இதற்கு மனைவி சங்கீதா தான் பின் புலத்தில் இருக்கிறார் என்ற தகவலும் வெளியானது. அதே சமயம் இடையில் சில கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்துவிட்டார்கள் என்றும் கடந்த ஆண்டு இருவருக்கும் விவாகரத்து ஆகிவிட்டது என்றும் செய்திகள் கசிந்து வந்தது. அவரை விவாகரத்து செய்து நடிகை கீர்த்தி சுரேஷை திருமணம் செய்யவுள்ளதாக இணையதள புகைப்படம் வைரலானது.
இதுதான் உண்மை
இந்நிலையில், விஜய் - சங்கீதா விவாகரத்து ஒரு வதந்தி செய்திதான் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள். சங்கீதா சில மாதங்களுக்கு முன்பே லண்டனில் தன் அப்பாவின் வீட்டிற்கு வெகேஷன் சென்றுள்ளதால் தான் பல நிகழ்ச்சிகளுக்கு கலந்து கொள்ளாமல் போனது. விஜய்யின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சி முடிந்து கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு மனைவி மற்றும் பிள்ளைகளுடன் மாமனார் வீட்டில் பங்கேற்க லண்டன் சென்றுவிட்டார் என்றும் கூறப்படுகிறது.
முற்றுப்புள்ளி
இந்நிலையில் விஜய் - சங்கீதா விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க ஒரே விசயம் நடந்தால் அதையெல்லாம் நிறுத்த முடியும். விஜய் தன் குடும்பத்துடன் ஒன்றாக இணைந்து புகைப்படம் வெளியிடுவது. இல்லையென்றால் குடும்பத்து விமான நிலையத்திலோ அல்லது வீட்டிற்கு போகும் வழியிலோ எடுத்த புகைப்படம் வெளியாகி இருந்தால் இதற்கு முற்றுப்புள்ளி கிடைத்திருக்கும்.
தற்போது சென்னைக்கு வந்தால் சங்கீதா விஜய்யுடன் இணைந்து சென்றால் கூட இதற்கான தீர்வு கிடைக்கும். 24 வருட திருமண வாழ்க்கையில் இப்படியொரு கதையை யாரும் கேட்டதில்லை என்று ரசிகர்கள் பொங்கி வருகிறார்கள்.