ரஜினி, கமல் வளர காரணமாக இருந்த பிரபலம்!! 94 வயதாகி யாரும் கண்டுகொள்ளாமல் மரணமடைந்த நிலை
சினிமாவில் தற்போது லிஜெண்ட் நடிகர்களாக திகழ்ந்து வரும் பிரபலங்கள் வளர்ச்சியில் பலர் ஏதாவது ஒருவிதத்தில் காரணமாக இருப்பார்கள். அப்படி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் போன்ற சினிமா நட்சத்திரங்களின் படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டராக திகழ்ந்து வந்தவர் ஜுடோ கே கே ரத்னம்.
ரஜினி, கமல் உள்ளிட்ட பல தமிழ் நடிகர்களின் ஸ்டண்ட் காட்சிகளை சிறப்பாக அமைத்து கொடுத்தவர். அவர் பயிற்சியில் தற்போது 20க்கும் மேற்பட்ட சண்டை பயிற்சியாளர்கள் சினிமாவில் இருந்து வருகிறார்கள். ரஜினிகாந்தின் முரட்டுகாளை படத்தின் ரயில் சண்டை காட்சி உட்பட 46 படங்களுக்கும், கமலின் நல்லவனுக்கு நல்லவன் படம் உட்பட 7 படங்களிலும் பணியாற்றி இருவரின் வளர்ச்சியில் முக்கிய இடத்தில் இருந்து வந்தார்.
தற்போது 92 வயதாகிய ஜூடோ ரத்னம் கேட்பாரற்று உடல்நிலை சரியில்லாமல் உயிருக்கு போராடி வந்துள்ளார். இந்நிலையில் வேலூர் குடியாத்தம் பகுதியில் இருக்கும் அவரது வீட்டில் வசித்து வந்த ஜூடோ ரத்னம் உடல் நலக்குறைவு காரணமாக இன்று மரணமடைந்துள்ளார்.
யாரும் கண்டுகொள்ளாமல் அதுவும் ரஜினி, கமலுக்கு சண்டைக்காட்சியில் மிகப்பெரிய பக்கபலமாக இருந்த, அவர்கள் கூட மரண நேரத்தில் ஜூடோ ரத்னம் அவர்களை கண்டுகொள்ளவில்லையாம்.
ஆனால் இன்று ரஜினிகாந்த் மட்டும் இறுதி சடங்கில் பங்கேற்று ஜூடோ ரத்னம் அவர்களை பற்றி பேசியுள்ளார்.
![Gallery](https://cdn.ibcstack.com/article/803e4ab8-122f-41a5-ad77-e47dd0acf1de/23-63d2c45f87560.webp)