தொலைக்காட்சி சீரியல் நடிகை பிரியா மஞ்சுநாதனா இது! வைரலாகும் இரு குழந்தைகளின் அழகிய புகைப்படம்..

priya manjunathan tv actress
By Edward Apr 26, 2021 12:00 PM GMT
Report

தொலைக்காட்சி சீரியல் மற்றும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானவர்கள் வரிசையில் இருந்தவர் நடிகை பிரியா மஞ்சுநாதன். பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நல்ல வரவேற்பை பெற்றார்.

இதையடுத்து சீரியல்களில் நடித்தும் வந்தார். பிரியா மஞ்சுநாதன் சில ஆண்டுகளுக்கு முன் சுந்தர் என்பவரை திருமணம் செய்து வெளிநாட்டில் செட்டிலானார். வெளிநாட்டில் பணியாற்றி வந்த மஞ்சுநாதனின் கணவர் தற்போது சென்னையில் பணியாற்றி வருவதால் இங்கேயே செட்டிலாகியுள்ளார்கள்.

இருவருக்கும் ஏற்கனவே பெண் குழந்தை பிறந்து வளர்ந்த நிலையில் சமீபத்தில் மற்றொரு பெண் குழந்தையும் பிறந்துள்ளது பிரியா மஞ்சுநாதனுக்கு. தன் இரண்டாம் குழந்தையின் புகைப்படத்தை இணையத்தில் தற்போது வெளியிட்டுள்ளார்.

இதைபார்த்த ரசிகர்கள், ஆச்சரியத்தில் பிரியா மஞ்சுநாதனா இது ? இரு குழந்தை இருக்காங்களா என்று கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.