காவலரின் கையை கடித்த தவெக தொண்டர்!! கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்..
தமிழக வெற்றிக் கழகம்
நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து கடந்த ஆண்டுமுதலே, தன்னுடைய அரசியல் பயணத்தை தொடங்கினார். கடந்த சில அக்டோபர் மாதம் நடத்திய கரூர் பிரச்சாரத்தின் போது 41 பேர் உயிரிழந்த சம்பவதால் விஜய்யை பலரும் விமர்சித்து பேசி வருகிறார்கள்.

இந்த சம்பவதால் மனமுடைந்த விஜய் பல நாட்கள் வெளியில் வராமல் இருந்தார். நாளை பாண்டிச்சேரியில் தன்னுடைய அரசியல் பிரச்சாரத்தை செய்யவுள்ள நிலையில், தவெக கட்சி தொண்டகர்கள் செய்த சில மோசமான செயல்கள் இணையத்தில் பரவி, பேசுபொருளாகியுள்ளது.
தவெக தொண்டர்
தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் இருக்கும் தனியார் மதுபான கடையை இழுத்துமூடக் கோரி தவெகவினர் போராட்டம் நடத்தியுள்ளனர். அப்போது பாதுகாப்பிற்காக இருந்த காவலர் ஒருவரை தவெக தொண்டர் ஒருவர் கையை கடித்துள்ளார்.

தவெக தொண்டரின் அந்த வீடியோ இணையத்தில் பரவி தவெகவினரை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
காவலரின் கையை கடித்த தவெக தொண்டர்.#tvkpolicebite #Dharmapuri #tvkvijay #ibctamil pic.twitter.com/dz82E4WLSU
— IBC Tamil (@ibctamilmedia) December 8, 2025