முன்னாள் கிரிக்கெட் அணி கேப்டன் தோனிக்கு டிவிட்டர் நிறுவனம் செய்த செயல்! கோபத்தில் ரசிகர்கள்

twitter csk mahendrasinghdhoni msd
By Edward Aug 06, 2021 03:30 PM GMT
Report

இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடி பல கோப்பைகளை கேப்டனாக பணியாற்றி கொடுத்தவர் மகேந்திர சிங் தோனி. 2007ல் கேப்டன் பதவியை ஏற்று 2017 ல் கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.

பின் 2020ல் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவரை அடுத்து கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுன் ஓய்வு செய்தியை அறிவித்தார். இருவரும் தற்போது ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்கு ஆதரவாக விளையாடி வருகிறார்கள். தோனி எப்போவாது தான் சமுகவலைத்தள பக்கத்திற்கு வருவார்.

பல மாதங்களாக எந்த பதிவினையும் போடாமல் இருந்துள்ளார் தோனி. இந்நிலையில், அவருக்கு வழங்கப்பட்ட நீல நிற பேட்ஜ் எடுத்துள்ளது டிவிட்டர் நிறுவனம். ஏனென்றால் கடந்த ஜனவரி மாதம் தான் எம் எஸ் தோனி டிவிட்டரில் கருத்துக்களை பரிமாறினார். அதன்காரணமாக இதை செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. இதற்கு தோனியின் ரசிகர்கள் டிவிட்டர் மீது கோபத்தில் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

முன்னாள் கிரிக்கெட் அணி கேப்டன் தோனிக்கு டிவிட்டர் நிறுவனம் செய்த செயல்! கோபத்தில் ரசிகர்கள் | Twitter Has Removed Ms Dhoni Blue Tick