டான் படத்தில் இந்த ரெண்டு பேரு இல்லனா அவ்வளவு தான்! தேம்பித் தேம்பி அழ வைத்த கதாபாத்திரம்..

Samuthirakani Sivakarthikeyan S.J.Suryah Don
By Edward May 14, 2022 10:45 AM GMT
Report

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் பல நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள படம் டான். நேற்று இப்படம் தியேட்டர்களில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றும் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல கருத்துக்களையும் பெற்று வருகிறது.

இந்நிலையில் படத்தில் சில இடங்கள் வெறுப்பேற்றும் வகையில் இருப்பதாக கூறி வருகிறார்கள். அதிலும் சிவாங்கி ரோலை குறிப்பிட்டு மிகவும் மோசமான நடிப்பு என்று தெரிவித்தும் வருகிறார்கள். இந்நிலையில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் கதாபாத்திரங்களை தவிர இருவர் படத்தின் முக்கிய தூண்களாக நடித்துள்ளனர்.

சிவகார்த்திகேயனுக்கு அப்பாவாக நடித்துள்ள சமுத்திரகனி அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார். மகன் இன் ஜினியராக வேண்டும் என்பது அப்பாவின் கனவு என்பதால் பொறியியல் படப்பில் சேர்க்கிறார்.

படிப்பே வராத மகன் என்ன செய்யலாம் என்று குழப்பத்தில் இருக்கும் மகனிடம் ஒரு அப்பா எப்படி நடந்து கொள்வாரோ அதே போல் நடித்துள்ளார்.

ஒரு காட்சியில் சிவகார்த்திகேயனிடம் அவரது அம்மா உன் அப்பாவின் பாதங்களை பார்த்து இருக்கியா என கேட்கும் போது இறந்து கிடக்கும் தனது அப்பாவின் பாதத்தை சிவகார்த்திகேயன் பார்க்கும் காட்சி ரசிகர்களை உருக வைத்துள்ளது.

இவருக்கு அடுத்தபடியான ரோலில் பட்டையை கிளப்பியவர் பிரஃபஸர் பூமிநாதன். இந்த ரோலை தன் முழு நடிப்பினை வெளிப்படுத்தி இருக்கிறார் எஸ் ஜே சூர்யா.

மாநாடு படத்தை விட எஸ்ஜே சூர்யாவின் இப்படத்தின் காட்சிகளை மிகவும் அருமையாக கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர் மிகவும் ஈர்த்துள்ளதாக கூறி வருகிறார்கள்.