சூர்யா நியமித்த இருவர்! பாலாவின் சுயரூபத்தை அடக்க முடியாமல் திணறியதற்கு இவர்கள் தான் காரணம்..

Suriya Sudha Kongara Bala
By Edward May 26, 2022 01:30 AM GMT
Report

நடிகர் சூர்யா சுமார் 18 ஆண்டுகளுக்கு பிறகு தன்னை நம்பி இருந்த இயக்குனர் பாலாவுக்கு 41வது படத்தினை இயக்க கையில் கொடுத்தார். படமும் பூஜைப்போட்டு கன்னியாக்குமரியில் விறுவிறுவென சென்றது. சூர்யாவின் தயாரிப்பில் நடிகை ஜோதிகாவும் இணைந்து நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியானது.

இடையில் சூர்யாவுக்கு பாலாவுக்கு ஏற்பட்ட பிரச்சனையால் படபிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இந்த பிரச்சனை முடிந்து மீண்டும் ஷூட்டிங் ஆரம்பிப்பார்கள் என்று எதிர்ப்பார்த்த நிலையில் இருவருக்கும் இடையேயான பிரச்சனை சரியாகவில்லையாம்.

இதற்கு முழு காரணம் EP தானாம். இயக்குனர் சுதா கொங்கரா தான் இப்படத்தில் நிர்வாக தயாரிப்பாளராக ஆர்ம்பத்தில் பணியாற்றினார். ஆனால் சூரரை போற்று படத்தின் இந்தி ரீமேக்கில் பிஸியாக இருப்பதால் தன் இரு மகள்களை பாலா படத்திற்கு நிர்வாக தயாரிப்பாளராக அனுப்பி வைத்துள்ளார்.

இவர்கள் இருவரும் தான் படத்திற்கு சகலமும் ஆக இருந்து சூர்யா மற்றும் பாலாவின் மனது கோணாமல் ஷூட்டிங்கை நடத்தி செல்கின்றனர். மேலும் சூர்யாவின் நண்பர்கள் கூட ஷூட்டிங்கில் முக்கிய பொருப்பில் இருந்து வந்துள்ளனர்.

இவர்கள் எப்படியாவது முன்நின்று இருவருக்கும் இடையில் உருவான பிரச்சனையை சரி செய்திருக்கலாம். அப்படி செய்யாமல் வேடிக்கை பார்த்தது தான் பாலாவின் ஆட்டத்திற்கு அடிதளமாக இருந்துள்ளது என்று பலர் விமர்சித்து வருகிறார்கள்.

பாலா சூட்டிங் ஸ்பாட்டில் அனைவரையும் எப்படி வேலை வாங்குவார் என்பது தெரிந்த கதைதான். அப்படி கோபக்கார இயக்குனரை அவர்கள் இருவரும் இன்னும் கோபப்படுத்தி விட்டார்களா அல்லது அவர்களின் தலையீடு பிடிக்காததால் பாலாவுக்கு மனவருத்தம் ஏற்பட்டதா என்று தெரியவில்லை.