42 வயதில் திருமணமாகாமல் இரு பெண் பிள்ளைகள்! 15 வயது குறைவானவரை திருமணம் செய்த சுஷ்மிதா சென்னா இது!

movie Sushmita Sen mudhalvan ratchagan
By Jon Apr 11, 2021 05:39 PM GMT
Report

இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை சுஷ்மிதா சென். மாடலிங் முடித்த சுஷ்மிதா சென் 1994ல் மிஸ் யூனிவர்ஸ் பட்டத்தை வென்று உலகழகியானார். இதையடுத்து தமிழில், ரட்சகன் படத்தில் நாகர்ஜுனாவிற்கு ஜோடியாக நடித்தார். முதல்வன் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுமுள்ளார்.

இதையடுத்து சிறப்பு கதாபாத்திரங்களில் நடித்து வந்த சுஷ்மிதா 42 வயது வரை திருமணமாகாமல் இருந்து வந்தார். இதற்கு காரணம் பல கூறப்பட்ட நிலையில், இரு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வந்தார். சில காலங்கள் சென்ற நிலையில் மாடலிங் துறையில் இருந்த ரஹ்மான் சாவ்ல் என்பவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் காதலித்து வந்தார்.

திருமணமாகாமல் இருவரும் நெருக்கமாக இருந்து வந்ததை தொடர்ந்து கடந்த 2018ல் திருமணம் செய்து கொண்டார். இரு பெண் குழந்தைகளின் சம்மதத்துடன் இருபரும் திருமணமாகி குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார்கள். லாக்டவுன் சமயத்தில் சுஷ்மிதா சென்னும் ரஹ்மானுன் இணைந்து உடற்பயிற்சி வீடியோக்களை வெளியிட்டு வந்தனர்.

கடைசியாக நடிகை சுஷ்மிதா சென் கடந்த ஆண்டு ஆர்யன் என்ற படத்தில் நடித்து அப்படம் ஹாட்ஸ்டாரில் வெளியாகியது. தற்போது இரு பெண் பிள்ளைகளின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.