அமைச்சரானதும் புத்திசாலித்தனமாக பின்வாங்கிய உதயநிதி!! மாஸ்டர் பிளான் போட்ட கமல் ஹாசன்
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் கமலின் ராஜ் கமல் நிறுவனம் விக்ரம் படத்தினை தயாரித்து ஜூன் 3 ஆம் தேதி வெளியிட்டது. இப்படத்தினை உதயநிதி ஸ்டாலினி ரெட்ஜெயண்ட் நிறுவனம் மூலம் படத்தில் விநியோகம் செய்தார்.
ராஜ் கமல் நிறுவனம் - உதயநிதி
படமும் மிகப்பெரிய வெற்றியை தட்டிச்சென்ற நிலையில் உதயநிதி ஸ்டாலின் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்தில் நடித்து முடித்துள்ளார். ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் 15 ஆம் ஆண்டு விழாவில் கமல் ஹாசன் தன் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பதாக கூறி அதிகாரப்பூர்வ அறிவிப்பை தெரிவித்தார்.
ஆனால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் உதயநிதி ஸ்டாலினுக்கு முதல்வர் கடந்த வாரம் அமைச்சர் பதவியினை கொடுத்தார். அமைச்சர் பதிவியால் தனக்கான பொறுப்புகளை செய்யமுடியாமல் போகும் என்பதற்காக நடிப்பதை நிறுத்திவிட்டேன் என்று கூறினார்.
அரசியல் வியூகம்
உதயநிதி ஸ்டாலினை வைத்து பெரிய அரசியல் வியூகத்தினை கமல் ஹாசன் போட்டு இருந்தராம். அடுத்த எலெக்ஷனில் இரு சீட்டாவது கேடு பெற்றுவிடலாம் என்பது தான். ஆனால் தற்போது அதற்கு அச்சாணி போட்டது போல் உதயநிதி கமல் ஹாசன் படத்தில் இருந்து விலகிவிட்டார்.
இந்நிலையில் 24ஆம் தேதி ராகுல் காந்தி தலையில் நடைபெறும் பாரத் கோடா யாத்திரையில் கமல் ஹாசன் கலந்து கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளார். இப்படியொரு பிளான் போட்டு கமல் ஹாசன் அரசியல் வியூகத்தை மாற்றி அமைத்து வருகிறார் என்று விமர்சகர்கள் கூறி வருகிறார்கள்.
இப்படத்தில் உதயநிதிக்கு பதில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.