விஜய்க்கு உதயநிதிக்கும் இடையே மூட்டிவிட்டு நபர்கள்.. பிரிந்ததற்கு இதுதான் காரணமாம்

Udhayanidhi Stalin Vijay
By Kathick 1 வாரம் முன்
Kathick

Kathick

எற்பட்ட பிரச்சனை

விஜய் - உதயநிதி ஸ்டாலின் இருவரின் நட்பும் குருவி படத்தில் இருந்து துவங்கியது. விஜய்யுடன் நெருங்கி பழகும் நபர்களில் உதயநிதி ஸ்டாலினும் ஒருவர். இப்படி இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில், திடீரென இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக சில ஆண்டுகள் பேசிக்கொள்ளாமல் இருந்ததாக தகவல் கூறப்பட்டது.

விஜய்க்கு உதயநிதிக்கும் இடையே மூட்டிவிட்டு நபர்கள்.. பிரிந்ததற்கு இதுதான் காரணமாம் | Udhayanidhi Stalin About Conflict With Vijay

இதுதான் காரணம்

இந்நிலையில், இது குறித்து அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய உதயநிதி ஸ்டாலின் ' நாங்கள் இருவரும் நெருக்கமான நண்பர்களாக தான் இருந்தோம். ஆனால், இடையில் இருவருக்குள்ளும் Misunderstanding ஆகிவிட்டது.

என்னை பற்றி அவரிடம் தவறாகவும், அவரை பற்றி எண்னிடம் தவறாகவும் சில நபர்கள் கூறினார்கள். அதனால் இருவருக்குள்ளும் இடைவெளி ஏற்பட்டுவிட்டது. அதன்பின் தான் ஒரு நாள் அவரை சந்தித்து, இதுதான் நடந்தது என்று தெளிவாக கூறிவிட்டேன். அதன்பின் இருவரும் சுமுகமாக பழக துவங்கிட்டோம் ' என்று கூறியுள்ளார்.