மனைவி கிருத்திகாவுக்கு முன்பே வேறொரு பெண்ணுடன் காதல்.. ஓப்பனாக கூறிய உதயநிதி..

Udhayanidhi Stalin Gossip Today Kiruthiga Udhayanidhi
By Edward Nov 15, 2022 02:00 PM GMT
Report

தமிழக முதல்வரின் மகனாக சேப்பாக்கம் தொகுதியில் எம் எல் ஏ வாக பணியாற்றி இடையில் நடிப்பு, ரெட் ஜெயண்ட் நிறுவனத்தை பார்த்துக்கொள்வது, குடும்பம், குழந்தை என்று பன்புகத்திறமையை சமாளித்து வருபவர் உதயநிதி ஸ்டாலின்.

கலகத் தலைவன்

ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் நல்ல வரவேற்பு பெற்ற உதயநிதி, சமீபத்தில் கலகத்தலைவன், மாமன்னன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கலகத் தலைவன் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில், படத்தின் பிரமோஷனுக்காக பேட்டிகளை கொடுத்து வருகிறார் உதயநிதி.

அப்படி சித்ரா லட்சுமணனின் யூடியூப் சேனலுக்கு பேட்டிக்கொடுத்துள்ளார். அதில் தன்னுடைய பள்ளிக்காதல், கல்லூரி காதல், மனைவி, அப்பா அம்மாவின் குணம் போன்றவற்றை வெளிப்படையாக கூறியுள்ளார். கூட்டுக்குடும்பம் என்பதால், அம்மா ரொம்ப கண்டிப்பானவர்.

மனைவி கிருத்திகாவுக்கு முன்பே வேறொரு பெண்ணுடன் காதல்.. ஓப்பனாக கூறிய உதயநிதி.. | Udhayanidhi Stalin Open Love Story Before Wife

பள்ளிக்காதல்

நானும் தங்கையும் அப்பா செல்லம் என்பதால் எங்களை அடிக்காமல் அப்பா பார்த்துக்கொள்வார். ஆனால் அப்பா என்னை மட்டும் அடிப்பார். அம்மா கண்டித்து மாட்டிய சம்பவம் என்ன என்ற கேள்விக்கு, பள்ளியில் படிக்கும் போது 10 ஆம் வகுப்பு படிக்கும் பெண்ணை காதலித்ததாகவும் இது அம்மாவிடம் கூறினேன்.

ஆனால் அம்மா கூறியதை நினைத்து இன்னும் அந்த சம்பவத்தை மறக்கமுடியவில்லை. அதன்பின் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் போது தான் கிருத்திகாவுடனாக காதல் ஆரம்பித்தது என்றும் கூறியுள்ளார்.

12 ஆம் வகுப்புக்கு பின் காதலித்த கிருத்திகாவை நானே விஸ்.காம் படிப்பில் சேர்த்துவிட்டேன். என் கண்பார்வையில் இருக்க தான் அப்படி செய்தேன் என்று ஓப்பனாக தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி கூறியுள்ளார்.

அதுதான் கிருத்திகாவை காதலிப்பதை அப்பாவிடம் தனியாக இருக்கும் போது கூறினேன். அதன்பின் அவரின் நண்பருடன் சேர்ந்து அப்பா, பெண் வீட்டில் பேசி ஓகே செய்தனர்.