அவசரபட்டு வார்த்தை விட்டுட்டோமோ!! மனைவியிடம் சிக்கிய உதயநிதி ஸ்டாலின்..

Udhayanidhi Stalin Marriage Kiruthiga Udhayanidhi
By Edward Feb 22, 2026 03:00 PM GMT
Report

தமிழக துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், தொடர்ச்சியாக கட்சி பணிகளை தீவிரமாக செய்து வருகிறார். சமீபத்தில், கலைவாணர் அரங்கில் 50 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடந்தது. திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, மணமக்களுக்கு தாலி எடுத்து கொடுத்து திருமணம் செய்து வைத்தார்.

உதயநிதி ஸ்டாலின்

அப்போது பேசிய உதயநிதி, இங்கு நிறைய 90ஸ் கிட்ஸ்கள் இருப்பார்கள் என்று நம்புகிறேன், நான் சொல்வது கீழே இல்லை, மேடையில் இருப்பார்கள். என் அருகே இருந்த தம்பதிகளுக்கு தாலி எடுத்துக் கொடுக்கும்போது அவர்கள் முகத்தில் மகிழ்ச்சி இருந்தது.

அவசரபட்டு வார்த்தை விட்டுட்டோமோ!! மனைவியிடம் சிக்கிய உதயநிதி ஸ்டாலின்.. | Udhayanidhi Stalin Responded To A Post By Krithika

எனக்கு சந்தேகம் வந்து அவர்களிடம், என்ன தம்பி காதல் திருமணமா இல்லை பெற்றோர் நிச்சயிக்கப்பட்ட திருமணமா என்று கேட்டேன். அதற்கு ஒருவர் ஆமாண்ணே காதல் திருமணம் தான், இரண்டரை வருட காதல் என்றார்.

காதல் திருமணம் ரொம்ப கஷ்டம்

அநேகமாக இந்த மேடையில் இருக்கும் நிறைய பேர் காதல் திருமணமாகத்தான் இருக்கும். காதல் திருமணம் என்பவர்கள் கைத்தூக்குங்க. இங்க இருப்பவர்களில் 90 சதவீதம் இல்லை 100 சதவீதம் காதல் திருமணம்தான்.

அவசரபட்டு வார்த்தை விட்டுட்டோமோ!! மனைவியிடம் சிக்கிய உதயநிதி ஸ்டாலின்.. | Udhayanidhi Stalin Responded To A Post By Krithika

கூடுதல் மகிழ்ச்சி என்னவென்றால் எனக்கும் காதல் திருமணம் தான். காதல் திருமணம் ரொம்ப கஷ்டம் என்று பேசினார்.

தன் கணவர் பேசியதை வீடியோவாக எக்ஸ் தளத்தில் பகிர்ந்த உதயநிதியின் மனைவி கிருத்திகா, ரொம்ப கஷ்டம் என்று கையை தூக்கி அமோதிப்பது போலவும், ஸ்மைலி ஒன்றையும் ஷேர் செய்துள்ளார். கிருத்திகாவின் அந்த பதிவிற்கு உதயநிதி ஸ்டாலின், அவசரப்பட்டு ப்ளோல வார்த்தையை விட்டுட்டோமோ என்று பதிலளித்தார். இந்த பதிவு இணையத்தில் தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

Gallery