தாலி எடுத்து கொடுத்த துணை முதலமைச்சர்..மருமகளுக்கு தாலிக்கட்ட முயன்ற மாமியார்...

Udhayanidhi Stalin Viral Video Marriage
By Edward Nov 17, 2024 06:35 AM GMT
Report

உதயநிதி ஸ்டாலின்

தமிழ் நாட்டின் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்து தற்போது துணை முதலமைச்சராக பதிவியேற்று சிறப்பாக பணியாற்றி வருகிறார் உதயநிதி ஸ்டாலின். பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் உதயநிதி, 48 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டிருக்கிறார்.

நிகழ்ச்சியில் ஒரு மணமக்களுக்கு தாலி எடுத்துக்கொண்டுத்த போது மணமகனின் தாயார் உதயநிதிக்கே அதிர்ச்சி கொடுத்திருக்கும் சம்பவம் தான் தற்போது வைரலாகி வருகிறது.

தாலி எடுத்து கொடுத்த துணை முதலமைச்சர்..மருமகளுக்கு தாலிக்கட்ட முயன்ற மாமியார்... | Udhayanidhi Stalin Shocked Marriage Programme

தாலி கட்ட முயன்ற மாமியார்

மணமகன் கையில் தாலி எடுத்துக்கொடுக்கும் போது, மணமகனின் தாயார் கையில் உதயநிதி, நீங்கள் கொடுங்கள் என்று கூறியிருக்கிறார். உடனே அந்த தாலியை வாங்கிய தாயார், மணமகளுக்கு தாலி கட்ட முயன்றிருக்கிறார்.

இதனால் உதயநிதி அதிர்ச்சியடைந்து என்னம்மா இப்படி பண்றீங்க, அவர் கைல கொடுங்க என்று கூறி சிரிப்புடன் ரியாக்ஷன் கொடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.