கமல் ஹாசனை மிரட்டி விக்ரம் படத்தை வாங்கினாரா? உண்மையை உடைத்த உதயநிதி ஸ்டாலின்..

Kamal Haasan Udhayanidhi Stalin Lokesh Kanagaraj Vikram Movie
1 மாதம் முன்
Edward

Edward

தமிழ் சினிமாவின் உலக நாயகனாக திகழ்ந்து வரும் நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படம் உருவாகியுள்ளது. ராஜ்கமல் பிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலினி ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடவுள்ளது.

இப்படம் வரும் ஜூன் 3 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தில் ஆடியோ மற்று டிரைலர் லான்ச் நேற்று நடைபெற்றது. டிரைலர் மிகப்பெரியளவில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் வருகை தந்து கமல்ஹாசன் பற்றி பேசியுள்ளார்.

அதில் கமல் ஹாசனை மிரட்டி தான் இப்படத்தினை வாங்கினேன் என்று சிலர் கூறுகிறார்கள். அவரை யாராலும் மிரட்ட முடியாது. யார் முரட்டினாலும் பயப்படக்கூடியவர் அவர் அல்ல என்று கூறியுள்ளார்.

மேலும் அரசியலில் சிறப்பாக செயல்படுகிறீர்கள். ஆனால் வருடத்திற்கு ஒரு படமாவது நடித்து ரிலீஸ் செய்யுங்கள் என்ற கோரிக்கையும் வைத்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.