இந்த மகா அசிங்கத்துக்கு தான் கல்யாணம் பண்ணிங்களா ராதிகா? முழு சுயரூபத்தை காட்டிய கோபி..

Star Vijay Baakiyalakshmi
By Edward Oct 13, 2022 01:50 PM GMT
Report
170 Shares

பிரபல தொலைக்காட்சி சேனலில் இல்லத்தரசிகளின் கஷ்டங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் சீரியல் பாக்கியலட்சுமி. பாக்யா என்ற ரோல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ரு வந்த நிலையில் கள்ளக்காதலி ராதிகாவை ஒருவழியாக திருமணம் செய்தார் கோபி.

திருமணம் முடிந்த கையோடு விருது வாங்குவதற்காகவும் ராதிகாவை ஹனிமூனுக்காகவும் ஊட்டி சென்றுள்ளனர். பாக்கியலட்சுமி - பாண்டியன் ஸ்டோர்ஸ் மகா சங்கமமாக சமீபகால எபிசோட் இருந்து வருகிறது.

இந்த மகா அசிங்கத்துக்கு தான் கல்யாணம் பண்ணிங்களா ராதிகா? முழு சுயரூபத்தை காட்டிய கோபி.. | Ugly Radhika On Honeymoon Gopi Who Showed

அப்படி ஊட்டி ஹனிமூனிற்காக சென்ற கோபியை கண்ணன் எதர்ச்சியாக பார்த்துவிட்டு அவர்களது ரூமிற்கு சென்று விளையாடுகிறார். அங்கு ராதிகாவை இருப்பதை பார்த்து ஷாக்கான கண்ணன், பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தையே கோபி ரூமிற்கு கூட்டி வருகிறார்.

அங்கு வந்த மூர்த்தி கட்டின பொண்டாட்டியை விட்டு வேறொரு பொண்ணோடு லாட்ஜில் ரூம் போட்டு தங்குவது அசிங்கமாக இல்லை என்று கோபியை திட்டியுள்ளார். இதனால் ராதிகா அசிங்கப்படுத்தி அதிர்ச்சியில் இருக்கும் நேரத்தில் தன் முழு சுய ரூபத்தை காட்ட ராதிகா நான் கட்டின பொண்டாட்டி என்று கோபி தாலியை காமிக்கிறார்.

பின் தங்களின் அக்காவாக கருதும் பாக்யாவிற்கு துரோகம் செய்ததை கொதித்தெழுத்த அண்ணன் தம்பிகளை எழிலும் அவரது குடும்பதினரும் சமாதானப்படுத்தி அழைத்து செல்கிறார்கள். இப்படி சம்மந்தமே இல்லாமல் மகா சங்கமம் ஆரங்கேறுவதை கலாய்த்தும் வருகிறார்கள் நெட்டிசன்கள்.