தலைக்கனத்தில் ஆடிய சிவகார்த்திகேயன்!! சூப்பர் ஸ்டாரை வைத்து சைலெண்ட்டாக ஆப்பு வைத்த சன் பிக்சர்ஸ்!!

Kamal Haasan Sivakarthikeyan Sun Pictures Jailer Maaveeran
By Edward May 06, 2023 06:15 PM GMT
Report

குறுகிய காலக்கட்டத்தில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் அறிமுகமாகிய குறுகிய காலத்தில் முன்னணி நடிகராக திகழ்ந்து கோடியில் சம்பளம் வாங்கும் நடிகராக விளங்கி வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். அயலான், மாவீரன் படங்கள் ரிலீஸ்க்கு வைட்டிங்கில் இருக்கும் நிலையில் கமல் ஹாசன் தயாரிப்பில் எஸ் கே 21 படத்தின் பூஜை ஆரம்பித்திருக்கிறார்.

ஏற்கனவே பிரின்ஸ் படத்தின் நெகட்டிங் மாவீரன் படத்தில் டிலே என்று பல விதத்தில் அடிவாங்கியிருக்கிறார். இப்படியொரு சமயத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரிய ஒரு ஆப்பினை சூப்பர் ஸ்டார் மூலம் கொடுத்துள்ளது. சில வருடங்களுக்கு முன் சன் பிக்சர்ஸ், சிவகார்த்திகேயனை வைத்து இயக்குனர் முத்தையாவின் இயக்கத்தில் கிராமத்து கதையில் நடிக்க புக் செய்திருந்தது.

தலைக்கனத்தில் ஆடிய சிவகார்த்திகேயன்!! சூப்பர் ஸ்டாரை வைத்து சைலெண்ட்டாக ஆப்பு வைத்த சன் பிக்சர்ஸ்!! | Un Pictures Checked Right Time To Sivakarthikeyan

அப்போது முத்தையாவின் சம்பளம் 2 கோடியாக இருக்கையில் தற்போது அவரின் சம்பளம் 6 கோடியாக மாறியிருக்கிறது. ஆனால் இதுவரை சிவாகர்த்திகேயன் முத்தையாவிடம் கதையை கேட்காமல் ஆட்டம் போட்டிருக்கிறார்.

தயாரிப்பு நிறுவனம் கூறியும் அதை செய்யாமல் இருந்து வந்துள்ளதை கடும் கோபத்தில் இருந்துள்ளனர் சன் பிக்சர்ஸ். மாவீரன் படம் ஆகஸ்ட் 11ல் வெளியாகும் என்று படக்குழுவினர் வெளியிட்ட நிலையில், சமீபத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10ல் வெளியிடவுள்ளதாக உறுதிப்படுத்தினர்.

சிவகார்த்திகேயனுக்கு குடைச்சல் கொடுக்கும் விதமாக சன் பிக்சர்ஸ் சரியான நேரத்தில் ஆப்பு வைத்துள்ளது. இதனால் அவர்களுக்கு இடையில் மாட்டிக்கொண்டு ஜூலை 14 ஆம் தேதியே படத்தினை திரையிட முடிவெடுத்துள்ளார்களாம்.