எதிர்பாராத எலிமினேஷன்!! குக் வித் கோமாளியில் இருந்து நடையை கட்டிய போட்டியாளர் இவரா?
குக் வித் கோமாளி 6
விஜய் டிவியில் கடந்த 6 ஆண்டுகளாக மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி. தற்போது சீசன் 6 நடைபெற்று வரும் நிலையில் ஏற்கனவே 4 பேர் எலிமினேட்டாகி வெளியேறிவிட்டனர்.
இந்த வாரம் நடைபெற்ற எலிமினேட் டாஸ்கில் 5வதாக வெளியேறி அந்த நபர் யார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. எலிமினேஷன் டாஸ்க்கில் உமைர், ராஜு, பிரியா ராமன் இடம்பெற்றனர்.
இதில் யார் ஸ்கோர் போர்ட்டில் கம்மியான மதிப்பெண் பெற்றிருக்கிறார்களோ அதன் அடிப்படையில் எலிமினேட் யார் என்று நடத்தப்பட்டது. அப்படி கடந்த வாரம் நடைபெற்ற குக்கிங் முடிவில் உமைர் ஸ்கோர் போர்ட்டில் 3வது இடத்தினை பிடித்து அவரை டேஞ்ஜர் ஜோனுக்கு தள்ளினர்.
அதேபோல் ராஜு மற்றும் பிரியா ராமனும் டேஞ்ஜர் ஜோனுக்கு சென்றனர். இதில் தன்னை எலிமினேட் செய்ய உமைர் சொல்லியிருந்தார். ஆனால் மற்ற இருவரும் குக்கிங் செய்து எலிமினேஷன் செய்ய சொன்னதால், மெஜாரிட்டி அடிப்படையில் குக்குங் செய்து எலிமினேட் செய்ய நடுவர்கள் முடிவெடுத்தனர்.
மேலும் மூன்று பேருக்கும் ஆட்டு ஈரல் கொடுக்கப்பட்டு டாஸ்க் கொடுக்கப்பட்டதில், ராஜு, பிரியா ராமனைவிட உமைரின் உணவு, சுமாரான சுவை இருந்ததால் நடுவர்கள் மூவரில் உமைரை எலிமினேட் செய்தனர்.
நடுவர்களின் இந்த முடிவு நடுநிலையானது இல்லை என்று இந்த முடிவை பார்த்து பலரும் கொந்தளித்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
