திருமண வாழ்க்கை போனதுக்கு நீங்க தான் காரணம்! விவாகரத்துக்கு பின் தயாரிப்பாளருக்கு ஷாக் கொடுத்த சமந்தா!!

Samantha Naga Chaitanya Marriage
2 மாதங்கள் முன்
Edward

Edward

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை சமந்தா காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து யசோதா, சகுந்தலம், குஷி போன்ற படங்களில் நடித்து வருகிறார். பாலிவுட் படத்தில் நடிக்கவுள்ள சமந்தா சமீபத்தில் தயாரிப்பாளரும் இயக்குனருமான கரண் ஜோகர் பேட்டியில் கலந்து கொண்டுள்ளார்.

அதில் நடிகை சமந்தா பேசிய பிரமோ வீடியோ வைரலாகி வருகிறது. அதில் சமந்தாவின் திருமண வாழ்க்கை சந்தோசம் இல்லாமல் போக என்ன காரணம் என்று கரண் ஜோகர் கேட்டிருந்தார்.

இதற்கு காமெடியாக பதிலளித்த சமந்தா, என் திருமண வாழ்க்கை சந்தோசம் இல்லாமல் போக நீங்களும் ஒரு காரணம். அதாவது கபிகுஷிகபிகம் படத்தில் திருமண வாழ்க்கை இப்படி இருக்கும் என்று காட்டினீர்கள்.

ஆனால் நிஜத்தில் கேஜிஎஃப் போன்று தான் இருக்கிறது என்று கூறியுள்ளார். இதில் இருந்து நடிகை சமந்தாவின் விவாகரத்துக்கு திருமண வாழ்க்கை சந்தோசத்தொ கொடுக்காமல் இருக்கிறது என்று கூறியுள்ளாரோ என்று நெட்டிசன்கள் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.