உத்ரா உன்னியுடன் அண்ணன் வாசுதேவ்! பாடகர் உன்னி கிருஷ்ணனின் மகனா இது!
தமிழ் சினிமாவில் காதலன் படத்தில் ஏ ஆர் ரகுமான் இசையில் என்னவளே பாடலை பாடி அறிமுகமானவர் பாடகர் உன்னி கிருஷ்ணன். இதையடுத்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் சும்மார் 4000 ஆயிரத்திற்கு மேற்பட்ட பாடலை பாடி ஈர்த்தவர் உன்னி கிருஷ்ணன்.
தற்போது, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பல ஆண்டுகளாக நடுவராக பங்கேற்று வருகிறார். பல விருதுகளை வாங்கி வந்த உன்னி தன் மகள் உத்ரா உன்னிகுருஷ்ணனை பிசாசு படத்தில் போகும் பாதை பாடலை பாடவைத்து அறிமுகப்படுத்தினார். இதையடுத்து கச்சேரி படங்கள் என பிஸியாக இருந்து வருகிறார்.
பெரும்பாலும் உன்னி கிருஷ்ணனின் மகளை பார்த்து வந்த ரசிகர்கள் அவருக்கு மகன் இருப்பதை யாரும் அறிந்திருக்கமாட்டோம். வாசுதேவ் கிருஷ்ணா என்ற மகன் இருக்கிறார் உன்னி கிருஷ்ணனுக்கு. தந்தை போல் பாடலை பாடி வெளியிட்ட வீடியோ புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.