’பெப்ஸி உங்கள் சாய்ஸ்’ உமாவா இவங்க!! இப்படி ஆளே மாறிட்டாங்களே..
பெப்ஸி உமா
சின்னத்திரை தொலைக்காட்சி உலகில் தவிர்க்க முடியாத தொகுப்பாளினியாக திகழ்ந்தவர் தான் பெப்ஸி உமா.

பெப்ஸி உங்கள் சாய்ஸ் என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலமான உமாவிற்கு பட வாய்ப்புகள் வந்தும் மறுத்துவிட்டதாக பேட்டியொன்றில் சமீபத்தில் தெரிவித்தார்.
தற்போது எத்தனையோ தொகுப்பாளர்கள் வந்தாலும், பெப்ஸி உமாவுக்கு இருந்த கிரேஸ் வேறு யாருக்கும் இல்லை என்பதுதான் உண்மை. எம்பிஏ படத்துள்ளவர், வாருங்கள் வாழ்த்துவோம் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழக்கி அறிமுகமானார்.
அதன்பின் தான் பெப்ஸி உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சி வழங்கப்பட்டது. அந்நிகழ்ச்சி தொடர்ந்து 15 ஆண்டுகள் ஒளிப்பரப்பானது, அதற்கு முழு காரணம் பெப்ஸி உமா மட்டும் தான்.
புகைப்படங்கள்
தனித்துவமான குரலாலும் அழகாலும் அத்தனை பேரையும் கட்டிப்போட்ட பெப்ஸி உமாவின் சமீபத்திய புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட உமா ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியிருப்பதை பலரும் வியந்து பார்த்து வருகிறார்கள்.
