61 வயதில் என்னால் முடியும் என்றால் உங்களால் ஏன் முடியாது!! நீடா அம்பானி மகளிர் தின அட்வைஸ்..

International Women's Day Mukesh Dhirubhai Ambani Nita Ambani Women
By Edward Mar 08, 2025 03:00 PM GMT
Report

நீடா அம்பானி

உலகின் டாப் கோடிஸ்வரராக இருக்கும் முகேஷ் அம்பானியின் மனை நீடா அம்பானி பல நிறுவனங்களை நிர்வகித்து வருகிறார். தொழிலை தாண்டி பல விஷயங்களை செய்து வரும் நீடா அம்பானி, மகளிர் தினத்தன்று ஒரு வீடியோ மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.

சர்வதேச மகளிர் தினத்தன்று உடல்நலத்தின் அவசியம் குறித்த அந்த வீடியோவில், கால்களுக்கு உடற்பயிற்சி செய்வது தனக்கு மிகவும் பிடித்தமானது.

61 வயதில் என்னால் முடியும் என்றால் உங்களால் ஏன் முடியாது!! நீடா அம்பானி மகளிர் தின அட்வைஸ்.. | Unstoppable At 61 Nita Ambani Womens Day Video

மகளிர் தின அட்வைஸ்

உடல் வலிமையை அதிகரிப்பதில் ஒவ்வொரு நாளும் முழு கவனம் செலுத்துவேன். 61 வயதில் என்னால் உடற்பயிற்சி செய்யமுடியும் என்றால் உங்களால் ஏன் முடியாது? என்று வினவி, உறுதியான பெண் இயக்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும் உடற்பயிற்சி தன்னை நிம்மதியாக உணர வைப்பதாகவும் அதன்மூலம் நாள் முழுவதும் நேர்மறை எண்ணத்தை உணருவதாகவும் நீடா அம்பானி தெரிவித்துள்ளார்.