கமலால் நடுத்தெருவுக்கு வந்து ஆளே காணாமல் போன தயாரிப்பாளர்!! உத்தமவில்லன்-ஆக மாறிய உலக நாயகன்..
கமல் ஹாசன் நடிப்பில் இயக்குனர் லிங்குசாமி தயாரிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான படம் உத்தமவில்லன்.
இப்படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் படுமோசமான தோல்வியை சந்தித்தது. இப்படத்தின் தோல்வியால் தயாரிப்பாளர் லிங்குசாமி கடன் பிரச்சனையால் சினிமாவை விட்டேவிலகும் நிலை உருவானது.

அதன்பின் லிங்குசாமி, தெலுங்கு பக்கம் சென்று வாரியர் என்ற படத்தினை இயக்கியும் படுதோல்வியை கொடுத்தது. இதனால் பணக்கஷ்டத்தில் நடுத்தெருவுக்கு வந்துவிட்டேன் என்று கூட பல மேடைகளில் பேசி வருகிறார்.
இந்நிலையில் உத்தமவில்லன் படத்தில் நஷ்டத்தை ஈடுசெய்ய கமல்ஹாசன் வேறு ஒரு படத்தினை நடித்து கொடுக்கிறேன் என்று உறுதியளித்துள்ளாராம்.
கமல்ஹாசன் அடுத்தடுத்த பிராஜெட் படங்களை கையில் வைத்திருக்கும் போது இப்படத்தினை எப்போது துவங்குவார் என்று கமல் - லிங்குசாமி பேசி முடிவெடுத்தால் தான் தெரியும்.
