படுதோல்வியை சந்தித்த வா வாத்தியார். இரண்டே வாரத்தில் ஓடிடி-க்கு வரும் நிலைமை
Karthi
Vaa Vaathiyaar
By Kathick
இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி பொங்கல் பண்டிகைக்கு வெளிவந்த படம் வா வாத்தியார்.
இப்படத்தில் கார்த்தியுடன் இணைந்து ராஜ்கிரண், ஆனந்த்ராஜ், க்ரித்தி ஷெட்டி, சத்யராஜ் என பலரும் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. இதனால் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை சந்தித்தது.
இதனால் படம் வெளிவந்து இரண்டு வாரங்களே ஆகும் நிலையில், ஜனவரி 28ஆம் தேதி, அதாவது நாளை இப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகிறது. இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
