பத்மினிக்கு கூட இப்படி முத்தம் கொடுத்திருக்க மாட்டார்!! இசைஞானியை கொச்சைப்படுத்திய கவிஞர்
தமிழ் சினிமாவின் நடிகர் திலகம் என்று தமிழ் ரசிகர்களால் புகழப்படுபவர் சிவாஜி கணேசன். அவரின் நினைவை குறித்த ஒரு நிகழ்ச்சியை பிரபு மற்றும் அவரது சகோதரர்கள் நடத்தியுள்ளனர்.
கவிஞர் முத்துராமலிங்கம், பாரதிராஜா, வைரமுத்து, பாக்யராஜ் உள்ளிட்ட முன்னணி பிரபலங்கள் கலந்து கொண்டு சிவாஜி கணேசன் அவர்களுடன் நினைவினை பகிர்ந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா பேசிகையில், தேவர்மகன் படத்தில் பொற்றிப்பாடடி கண்ணே பாடல் எடுக்கும் போது சிவாஜி அண்ணாவுடன் போட்டோஷூட் எடுத்தேன்.
அப்போது என்னை கட்டிப்பிடித்து சிவாஜி அண்ணன் கண்ணத்தில் முத்தம் கொடுத்தார்.
இதனை கவிஞர் வாலி அவர்கள், பத்மினிக்கு கூட இப்படி முத்தம் கொடுத்திருக்க மாட்டாரே என்று கலாய்த்தார்.
என்ன அண்ணா நீங்க வந்து, எவ்வளவு பிரியமா கொடுத்திருக்காரு அதை கொச்சைப்படுத்திட்டீங்களே என்று கேட்டாராம் இளையராஜா. அவங்களுக்கு கொடுத்தும் எனக்கு கொடுத்ததும் ஒன்னா என்று கேட்டாராம் இசைஞானி.