நீங்க வாத்தி இல்லையா.! வெறும் அப்படித்தான் வருவீங்களா?

dhanush vaathi
By Edward Jan 08, 2022 04:18 AM GMT
Report

தமிழ் சினிமாவில் பல அடிகளை வாங்கி பிளாப் படங்களால் உதறித்தள்ளும் அளவிற்கு தள்ளப்பட்டவர் நடிகர் தனுஷ். தற்போது தேசிய விருதுகளை அள்ளும் நடிகராகவும் பாலிவுட் ஹாலிவுட் நடிகராகவும் திகழ்ந்து வருகிறார். தற்போது பல படங்களை கைவைத்து நடித்து வரும் தனுஷ், வாத்தி என்ற படத்தின் படப்பிடிப்பை ஆரம்பித்துள்ளார்.

பாலிவுட்டில் அட்ராகி ரே என்ற படத்தில் நடித்து அனைத்து ரசிகர்களையும் தன்பக்கம் ஈர்த்த தனுஷ் தற்போது வாத்தி படத்தின் மூலம் தெலுங்கு பக்கம் சென்றுள்ளார். இப்படத்தை வெங்கி அட்லுறி என்பவர் இயக்கி வருகிறார். சமீபத்தில் அப்படத்தின் போஸ்டர் வெளியாகியது.

பள்ளி மாணவனாக நடிக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. ஏற்கனவே பள்ளி மாணவனாக மூன்று முறை நடித்திருப்பதால், வாத்தி என்ற தலைப்பை வைத்து ஆசிரியராக கூட நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தற்போது பள்ளி மாணவன் உடையில் வெளிவந்துள்ள இந்த போஸ்டர் ரசிகர் மத்தியில் பெரும் குழப்பத்தையும், அதிக எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.