கொரோனாவால் வடிவேலுக்கு வந்த விபரீதம்! நாய் சேகர் ரிடர்ன்ஸ்..
இம்சை அரசன் 24-ம் புலிகேசி படப்பிடிப்பில் ஏற்பட்ட பிரச்னையால் தயாரிப்பாளர் சங்கம் அவருக்கு ரெட் கார்டு கொடுத்திருந்தது. இதனால் அவர் வேறு எந்த படங்களிலும் நடிக்காமல் இருந்தார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு வடிவேலுவிற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது.
இதையடுத்து சங்கர் அதிலிருந்து சமரசம் செய்து கொண்டதால் தடை நீக்கப்பட்டது என்று அறிவித்த சில தினத்தில் வடிவேலுவை நோக்கி பல தயாரிப்பாளர் சென்று கால்ஷீட்டிற்காக வரிசையில் நின்றனர்.
லைக்கா தயாரிப்பில் பல படங்களில் கமிட்டாகி வடிவேலு மாநகரம் படத்தின் இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் நடித்து வந்த நிலையில், படத்தின் பாடல் காட்சிக்காக படக்குழு லண்டன் சென்றது. அங்கு வடிவேலு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது.
இதையடுத்து இந்தியா திரும்பிய வடிவேலுவிற்கு கொரானா உறுதியாகியுள்ளது. சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 61-வயதாகும் நடிகர் வடிவேலுவின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் மருத்துவமனை தகவல் வெளியாகியுள்ளது.