என் கண் முன்னே எங்க அம்மா..என்னிடமும் என் அப்பா!! நடிகை சோனாவின் மறுப்பக்கம்...
நடிகை சோனா
தமிழில் துணை கதாபாத்திரங்களிலும் கிளாமர் ரோல்களிலும் நடித்து பலரது கவனத்தை ஈர்த்தவர் தான் நடிகை சோனா. சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில் பேசிய பல விஷயங்கள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அதில், வடிவேலு ஒரு மிகச்சிறந்த நகைச்சுவை நடிகர் என்பதில் எந்த மாற்றமும் இல்லை, ஆனால் அவருடன் வேலை செய்த அனுபவம் எனக்கு மிகவும் மோசமாக இருந்தது. குசேலன் படத்தின்போது அவர் நடந்து கொண்டது என்னை பலவிதமாக பாதித்தது.
அப்படத்திற்கு பின் 16-க்கும் மேற்பட்ட படங்களில் அவருடன் நடிக்க வாய்ப்புகள் வந்தது, ஆனால் என் சுயமரியாதை முக்கியம் என்பதால் அனைத்தையும் நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். ரோட்டில் நின்று பிச்சை எடுத்தாலும் பரவாயில்லை, சுயமரியாதை இழந்து சம்பாதிக்கும் பணம் எனக்கு தேவையில்லை என்று கூறியிருந்தார்.

என் அப்பா
மேலும் என் அப்பா ரொம்ப மோசமானவர், ஆண் என்ற திமிரு அவருக்கு அதிகமாக இருந்தது. பெண்கள் என்றாலே செக்ஸுக்காக மட்டும் தான் என்ற நினைப்பு அவருக்கு இருந்தது. என் கண் முன்னே எங்க அம்மாவை ரொம்ப கொடுமைப்படுத்தி இருக்கிறார். என்னிடமும் ரொம்ப கடுமையா நடந்திருக்கிறார் என்று சோனா தெரிவித்துள்ளார்.