வாய்ப்பு கேட்டு வந்த நடிகர்..கேட் வாசலுக்கு விரட்டிவிட்ட புயல்!! கடைசியில் 34 வயசுல மரணம்..
சித்திரம் பேசுதடி படத்தில் இடம்பெற்ற வாளமீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம் பாடலில் கானா உலகநாதனுக்கு மைக் பிடிக்கும் ரோலில் நடித்தவர் தான் முத்துராஜா. அப்படம் மட்டுமின்றி களவாணி உள்ளிட்ட பல படங்களில் சிறுசிறு ரோலில் நடித்தவர். பெரிதாக வெற்றி பெறாமல் இந்த உலகத்தைவிட்டு பிரிந்துவிட்டார் என்று காதல் சுகுமார் தெரிவித்துள்ளார்.

காதல் சுகுமார்
காதல் சுகுமார் முகநூலில் வெளியிட்ட பதிவில், அவன் ஸ்டுடியோ கேட்டை விட்டு வெளியே போனால்தான் நடிப்பென், 2000 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் சினிமாவில் வருவது கஷ்டம், வந்துவிட்டால் நிலைப்பது சுலபம்.
ஒரேவொரு படத்தில் நடித்ததை வைத்து ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே சென்று வாய்ப்பு வாங்கிவிடலாம், ஆனால் அந்த ஒரு படம் எளிதாக கிடைத்துவிடாது. அப்போதெல்லாம் இரு காமெடி காங் இருந்தது. ஆனால் என்னைப்போல் புதிதாக வருபவர்களுக்கு அங்கிட்டும் இல்லாமல் இங்கிட்டும் இல்லாமல் நடுவில் அலைபாய வேண்டி இருக்கும்.

முத்துராஜா
அப்படித்தான் 15 ஆண்டுகளாக சூரி போன்றவர்களுடன் வாய்ப்பு தேடியவர் தான் முத்துராஜா. சாயலில் புயலை ஒத்திருப்பதால் இவரை கண்டாலே எரிந்து விழுவாராம் புயல். AVM-மில் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே வாய்ப்பு கேட்டு வந்தவனை பார்த்து, அவன் ஸ்டுடியோ கேட்டுக்கு வெளியே போனால் தான் நான் ஷாட்டுக்கு வருவேன் என்று இவரை விரட்டிவிட்டுதான் நடித்தார்.
அப்படி, சித்திரம் பேசுதடி படத்தில் பேசமலே இருந்து அடுத்தடுத்து 10 பட வாய்ப்பை பெற்றார் முத்துராஜா. திருமுருகன் இயக்கிய முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படத்தில் பெரிய வாய்ப்பு வர 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தப்பின் 34 வயதில் சிறப்பாக திருமணம் நடந்தது.
திருமணமாகி ஒரு மாதத்தில் வீட்டின் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது ஒரு பம்பி கிழித்துவிட, அதை கவனிக்காமல் விட்டது புரையொடு போய் ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கபப்ட்டு ஒருசில வாரத்தில் இறந்துவிட்டார் என்று அவரது நினைவு நாளில் காதல் சுகுமார் பகிர்ந்துள்ளார்.