ஆணவத்தின் உச்சிக்கே சென்ற வைகைப்புயல்!! தலைக்கனத்தில் ஆடிய வடிவேலுவுக்கு ஆப்பு வைத்த இயக்குனர்..
வைகைப்புயல்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர், வைகைப்புயல் என்ற பெயரோடு பல லட்சக்கணக்கான ரசிகர்களை சிரிக்க வைத்து வந்தவர் நடிகர் வடிவேலு. பல கஷ்டங்களை தாண்டி வந்த வடிவேலு சில ஆண்டுகளுக்கு முன் பல பிரச்சனைகளை சந்தித்து சினிமாவில் இருந்து ஒதுக்கப்பட்டார். லைக்கா நிறுவனம், சங்கர், விஜயகாந்த் போன்றவர்களுடன் சண்டைப்போட்டு பேரையும் கெடுத்துக்கொண்டார்.
அதிலும் தன்னை உயர்த்திய விஜயகாந்த் அவர்களை ஒருமையில் கீழ்தரமாக வாடா போடா என்றும் குடிகாரன் என்றும் விமர்சித்து பேசி வந்தார். சில படங்களில் வடிவேலு வேண்டும்மென்றே சில காட்சிகளை அவமானப்படுத்தும் வண்ணம் வைத்து நடித்தார் என்றும் கூறப்பட்டது.
வடிவேலு குணத்தை அறிந்து விஜயகாந்த் அமைதியாக இருந்தார். இதன்பின் சங்கருடன் பிரச்சனை என்று ரெட் கார்ட் போடப்பட்டு ஓரங்கட்டப்பட்டார் வடிவேலு. இது நடந்து 4 ஆண்டுகளுக்குப்பின் அதிலிருந்து மீண்டு வந்த வடிவேலு 4 படங்களில் லைக்கா தயாரிப்பில் கமிட்டாகி நடித்தார்.
சந்திரமுகி 2
அதில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் வெளியாகி மிகப்பெரிய தோல்வியை கொடுத்தது. அது ஒருபக்கம் இருக்க வடிவேலு ரஜினிகாந்த் நடிப்பில் சூப்பர் ஹிட் கொடுத்த சந்திரமுகி படத்தின் 2ஆம் பாகத்தில் இயக்குனர் வாசு இயக்கத்தில் நடித்தும் வருகிறார்.
ராகவா லாரன்ஸ், ராதிகா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், வடிவேலு மோசமாக நடந்து கொள்கிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. படத்தின் ஷூட்டிங் கால்ஷீட் டைம் 9 மணியாம்.
ஆனால் வடிவேலு 10 மணி, 11 மணி, 12 மணி என்று கூறி 12 மணிக்கு மேல் தான் ஷூடிங்கிற்கே வருகிறாராம். ஒரு சமயம் அவரது போனை ஸ்விச் ஆஃப் செய்தும் விடுகிறாராம். இப்படி வந்த வாய்ப்பையும் இப்படி தலைக்கனத்தில் செயல்படுகிறாரே என்று இயக்குனர் உட்பட பலர் கோபத்தில் இருக்கிறார்களாம். இதனால் இயக்குனர் படத்தின் வடிவேலு காட்சிகளை பலவற்றை தூக்கிவிட்டதாக கூறப்படுகிறது.