சூப்பர் ஸ்டார் ஜோடி தான் வேண்டும்! அடம்பிடித்து கோடியில் பேரம் பேசிய வைகைபுயல்

superstar vadivelu vaigaipuyal tamilactress shriyasaran eli
By Edward Apr 09, 2022 04:40 AM GMT
Report

தமிழ் சினிமாவில் காமெடி ஜாம்பவனாக இருப்பவர் நடிகர் வைகைப்புயல் வடிவேலு. அவர் முகப்பாவனைகளை வைத்து மக்களை சிரிக்க வைக்கும் திறமையிருந்த வடிவேலு, சில ஆண்டுகளாக ரெட் கார்டு கொடுக்கப்பட்டு சினிமாவில் இருந்து ஒதுக்கப்பட்டார்.

அதற்கு காரணம் சங்கருடன் ஏற்பட்ட மனக்கசப்பு தான் காரணம் என்று கூறப்பட்டது. வடிவேலு காமெடியனாகவும் இல்லாமல் ஹீரோவாகவும் ஒருசில படங்களில் நடித்தும் வந்தார். அப்படி வடிவேலு படவாய்ப்புகள் ஏதும் அமையாத தருணத்தில் வடிவேலுவின் ஒரு படத்திற்கு சூப்பர் ஸ்டார் ஜோடி தான் எனக்கு வேண்டும் என்று அடம்பிடித்துள்ளாராம்.

அப்படி ஒரு பாடலுக்காவது அந்த நடிகை வந்தாலே போதும் என்றளவிற்கு கூறி அடம்பிடித்துவிட்டாராம். அப்படி பல கோடிகளை அந்த சூப்பர் ஸ்டார் ஜோடிக்கும் சம்பளமாக கொடுத்து அவரை அழைத்து படத்தில் நடிக்க வைத்துள்ளனர். அது வேறுயாரும் இல்லை சிவாஜி தி பாஸ் படத்தில் நடித்த நடிகை ஸ்ரேயா சரண் தான்.