அறைக்குள் வைத்து நடிகர் வடிவேலுவை அடித்த நபர்.. அதுக்கு அப்றோம் தான் வடிவேலுக்கு இந்த நிலைமையாம்
தமிழ் திரையுலகில் தனது உடல் மொழி மூலம் நகைச்சுவை செய்து அசத்தியவர் வைகைப்புயல் வடிவேலு. பல பிரச்சனைகளுக்கு இடையே தற்போது மீண்டும் தமிழ் திரையுலகில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். நாய் சேகர் returns படத்தின் மூலம் மீண்டும் நடிக்க துவங்கியுள்ளார் நடிகர் வடிவேலு.
நடிகர் வடிவேலுவுக்கும் திரையுலகிலுள்ள பலரும் அவ்வப்போது வாக்குவாதங்களுக்கும், பிரச்சனைகளும் எழுந்ததுள்ளது. அந்த வகையில் நடிகர் நம்பிராஜன் என்பவருக்கும் வடிவேலுக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. பின்பு ஏவிஎம் ஸ்டுடியோவில் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்பு இருவருக்கும் இடையே கடுமையான கோபம் வர நம்பிராஜன் வடிவேலுவை பளார் என கன்னத்தில் அறைந்துள்ளாராம்.
இதனை பார்த்த ஒரே ஒருவர் பயில்வான் ரங்கநாதன் மட்டும் தான் இதனை அவரே ஒரு பேட்டியில் தெள்ளத்தெளிவாக தெரிவித்துள்ளார். மேலும் இது எனக்கு மட்டும் தான் தெரியும் வேற யாருக்கும் தெரியாது எனவும் பார்த்த ஒரே ஒரு ஆள் நான் மட்டும்தான் எனவும் கூறியுள்ளார். மேலும் இந்த மாதிரி ஒரு சில பிரச்சினையால்தான் வடிவேலு அடுத்தடுத்து படங்களில் நடிக்க முடியாமல் போனார் எனவும். சரியாக அனைவரிடம் நடந்து கொண்டிருந்தால் தற்போது அவர் அதிகமான படங்கள் நடித்து இருப்பார் எனவும் கூறியுள்ளார்.