ஹாஹா வந்துட்டான்யா! வந்துட்டான்யா! நடிகர் வடிவேலுவுக்கு கொரோனா
corona
covid 19
vadivelu
By Kathick
உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த கொரோனா தொற்று பல கோடிக்கணக்கில் உயிர்களை பறித்துள்ளது. அதிலும், திரையுலகை சேர்ந்த பலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு, அதில் பலர் மரணமடைந்தனர். ஆனால் அதிலும் சிலர் கொரோனாவில் மீண்டு வந்தனர்.
இந்நிலையில் தற்போது நடிகர் வடிவேலுவுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்ற அதிர்ச்சியளிக்கும் செய்தி வெளியாகியுள்ளது. படப்பிடிப்பிற்காக வெளிநாட்டிற்கு சென்று திரும்பும் பொழுது தான், வடிவேலுவுக்கு கொரோனா இருக்கிறது என்று உறுதி செய்துள்ளனர்.
ஆம், லண்டனிலிருந்து திரும்புபவர்களுக்கான உடல் பரிசோதனை நடந்தது. அதில் கொரோனா பாஸிட்டிவ் என்று வர இப்போது ராமசந்திராவில் அட்மிட் ஆகியிருக்கிறாராம் நடிகர் வடிவேலு. விரைவில் வடிவேலு பூர்ணமாக குணமடைய வேண்டும் என்று அவரது ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.