வாழ்க்க ஒரு வட்டம் டா.. நடிகர் விஜய்யை பார்த்து கைகொட்டி சிரித்த வடிவேலு
நடிகர் விஜய் மற்றும் வடிவேலுவின் காமெடி காம்போ என்று தமிழ் சினிமாவில் இருந்து அளிக்க முடியாத ஒன்று. Friends, சச்சின், மதுர, காவலன், மெர்சல் என சொல்லி கொண்டே போகலாம்.
அந்த அளவிற்கு இருவரும் இணைந்து செய்க்கூடிய நகைச்சுவை மனதையும் சிரிக்கவைக்கும். அதிலும் குறிப்பாக, Friends படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சியில், நடிகர் வடிவேலுவின் மீது கருப்பு நிறம் பூட்டப்பட்டு விடும். இதனை பார்க்கும் விஜய் சிரிப்பை அடக்கமுடியாமல் விழுந்து விழுந்து சிரிப்பார்.
இந்நிலையில், அதே போல் தற்போது ஒரு நிகழ்வு நடந்துள்ளது. ஆனால் இது கொஞ்சம் வேற ஸ்டைலில். அதாவது, Friends படத்தில் வடிவேலுவை பார்த்து விஜய் சிரித்தபடி, தற்போது பீஸ்ட் படத்தில் இருந்து வெளிவந்த ரிலீஸ் அறிவிப்பு லுக்கை பார்த்து, வடிவேலு சிரிப்பது போல் மீம் ஒன்றை ரசிகர்கள் உருவாக்கியுள்ளது.
ஏனென்றால், இதில் விஜய் கொஞ்சம் வயதான தோற்றத்தில் காணப்படுவதும் முக்கிய காரணமாக நெட்டிசன்களாக கூறப்படுகிறது.
