தலைக்கனத்தில் வாய்கொழுப்பில் மாட்டிய வடிவேலு!! மார்க்கெட்டை பிடிக்க பக்கா பிளான் போட்டு தூக்கிய வைகைப்புயல்..

Vadivelu Gossip Today
By Edward May 13, 2023 11:20 AM GMT
Report

தமிழ் சினிமாவின் லெஜெண்டரி காமெடி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் வடிவேலு. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சில பிரச்சனைகள் ஏற்பட்டு ரெட் கார்ட் போடப்பட்டு சினிமாவில் நடிக்க தடை போடப்பட்டது.

அதன்பின் அதிலிருந்து மீண்டு வந்த வைகைப்புயல், நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்தார். வடிவேலு ரெட் கார்ட் போடப்பட்டதற்கு பல காரணங்கள் இருந்தாலும் அதற்கு முக்கிய காரணம் என்று பெரியளவில் பேசப்பட்ட விசயம் விஜயகாந்துடன் ஏற்பட்ட மோதல் தான்.

அரசியல் பிரச்சாரத்தின் போது, விஜயகாந்த் அவர்களை தரைக்குறைவாக பேசியது முதல் அவரது அலுவலகத்திற்கு முன் விஜயகாந்த் தொண்டர்களின் காரை நிறுத்தியதால் ஏற்பட்ட பிரச்சனை வரை வடிவேலுவின் அட்டகாசம் அதிகரித்தது.

இதனால் கடுமையாக கோபப்பட்ட விஜய்காந்த் ஆள் வைத்து வடிவேலுவை அடித்ததாகவும் கூறப்பட்டது. இதனால் வடிவேலு தலைமறைவாகவும் இருந்தார். அதன்பின் அவர் நடிப்பில் எந்த படங்களும் வெளியாகாமல் இருந்தது.

அதன்பின் சங்கருடன் ஏற்பட்ட தகராற்ய் காரணமாக சில காலங்கள் படங்களில் நடிக்க சினிமாத்துறையே ரெட் கார்ட் போட்டனர். இதெல்லாம் தவிர ரெட்கார்ட்டில் இருந்து மீண்டு வந்தாலும் தற்போது நடித்து வரும் படங்களில் கூட தன் வேலையை காட்டி வருகிறார் வடிவேலு. அதனால் தான் ஏற்படும் பிரச்சனைகளை சரிக்கட்டவும், மாமன்னன் படத்தில் வடிவேலு உதயநிதியுடன் நடித்து வருகிறார்.