திருமணமாகாத 50 வயது நடிகையுடன் இணைந்த வடிவேலு..

Vadivelu Actors Tamil Actors
By Dhiviyarajan Jan 21, 2024 04:02 AM GMT
Report

மலையாள சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவர் தான் சதீஷ் ஷங்கர். இவர் தமிழில் ஆறுமனமே என்கிற ஒரே ஒரு படத்தை மட்டும் இயக்கி இருக்கிறார்.

தற்போது சதீஷ் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் படத்தில் வடிவேலு நடிக்கவுள்ளார். இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் பகத் பாசிலும் நடிக்கிறாராம். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இதற்கு முன்பு இவர்கள் காம்போவில் வெளிவந்த மாமன்னன் திரைப்படமும் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது.

இந்நிலையில் இப்படம் குறித்து இன்னொரு அப்டேட் வெளியாகி இருக்கிறது. அது என்னவென்றால் இப்படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக பிரபல நடிகை சித்தாரா நடிக்கவிருக்கிறாராம்.

90களில் தமிழ், மலையாளம் எனப் மொழி படங்களில் நடித்து பிரபல நடிகையாக வலம் வந்த சித்தாராவுக்கு, தற்போது 50 வயது ஆகிறது. இன்னும் இவர் கல்யாணம் செய்துகொள்ளாமல் முரட்டு சிங்கிளாகவே இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

You May Like This Video