4 ஆண்டுகளாக விட்டதை பிடிக்க பிளான் போடும் வடிவேலு! இந்த புது படத்திற்கு இத்தனை கோடி சம்பளமா?
தமிழ் சினிமாவில் தற்போது பல பிரச்சனைகளுக்கு பிறகு மீண்டும் கலமிரங்க தயாராக இருக்கிறார் வைகைபுயல் வடிவேலு. காமெடி ஜாம்பவானாக கலக்கி கொண்டு வந்த வடிவேலும் இயக்குநர் சங்கர் தயாரிப்பில் இம்சை அரசன் 24ஆம் புலிகேசி படத்தின் படப்பிடிப்பில் சில பிரச்சனை ஏற்படுத்தி வந்ததாகவும் படத்தில் இருந்து விலகுவதாகவும் கூறியிருந்தார்.
இதனால் படத்திற்காக சுமார் 7 கோடி ரூபாய் அளவிற்கு நஷ்டம் ஏற்பட்டதாக தயாரிப்பாளர் சங்கத்தினரிடம் சங்கர் புகாரளித்தார். இதையடுத்து ரெட் கார்டு விடுக்கப்பட்டு படத்தில் நடிக்க தடைவிதிக்கப்பட்டது. தற்போது சங்கருடன் சமாதானம் செய்தபின் மீண்டும் ரெட் கார்டு எடுக்கப்பட்டு ரீஎண்ட்ரி கொடுக்கவுள்ளார் வைகைபுயல். நான்கு வருடங்களுக்கு பிறகு லைக்கா நிறுவனத்தின் 4 படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார் நடிகர் வடிவேலு.
அதில் நாய் சேகர் என்ற படத்தில் இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் லைக்கா நிறுவனம் தயாரிப்பில் ஹீரோவாக நடிக்கவுள்ளார். அப்படத்திற்காக 4 வருடங்களுக்கு முன் 8 முதல் 10 கோடி ரூபாய் வரையிலான சம்பளம் பேசியிருந்ந்தார் வடிவேலு.
தற்போதைய நிலைக்கு சம்பளத்தை 10 கோடிக்களுக்கு மேல் பேசி வருவதாக தகவல் மேலோட்டமாக வெளியாகி வருகிறது. தனக்கு உயிரூட்டிய அனைத்து மீம்ஸ் கிரியேட்டர்களுக்கும் நன்றியும் தெரிவித்துள்ளார் வடிவேலு.