தனுஷுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை கொளுத்திப் போட்டார்கள்!! வடிவேலு ஓபன் டாக்..
வடிவேலு
வைகைப்புயல் வடிவேலு கடந்த 2011ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாகவும் அதிமுக - தேமுதிக கூட்டணிக்கு எதிராகவும் பேசி வந்தார். குறிப்பாக மறைந்த கேப்டன் விஜயகாந்தை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கி பேசினார்.
இதனையடுத்து சினிமாவில் நிலைக்காமல் போன வடிவேலு சில ஆண்டுகள் விலகி இருந்தார். அதன்பின் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வந்த வடிவேலு, மாமன்னன், சந்திரமுகி 2, மாரீசன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது தனுஷுடன் இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து இயக்கத்தில் உருவாகவுள்ள படத்திலும் நடிக்கவுள்ளார்.

ஏற்கனவே மாப்பிள்ளை படத்தின்போது வடிவேலுவுக்கும் தனுஷுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இணைந்து வேலை செய்யாமல் இருந்து வந்ததாக தகவல் வெளியானது.
இந்நிலையில், தனுஷின் D56 பட பூஜையை முடித்துவிட்டு பேசிய விசயம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தனுஷுடன் ஏற்பட்ட
D56 படத்தின் மூலம் தனுஷுடன் பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. இத்தனை வருடங்களாக ஏன் இணைந்து பணியாற்றவில்லை என்று நீங்கள் கேட்கலாம். எங்கள் ஃபீல்டில் இருவரும் பிரிவதற்கு அத்தனை வேலைகளையும் பார்ப்பார்கள். தீப்பொறியை வைத்து கொளுத்திப் போடுவார்கள். எங்களுக்கிடையே தீ பந்தத்தையே போட்டுவிட்டார்கள்.
இப்படம் அரசியல் சார்ந்த படமாக இருக்காது. வித்தியாசமான படம். கதையை கேட்டப்பின் பெருமையாகவும், ஆச்சரியமாகவும் உணர்ந்தேன், இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று வடிவேலு தெரிவித்துள்ளார்.