தரம் தாழ்ந்து ஆணவத்தில் ஆடிய வைகைப்புயல்! இந்த நடிகரை ஃபாலோ பண்ணுங்க ஜி..
தமிழ் சினிமாவில் காமெடிக்கு பேர்போன நடிகராக திகழ்ந்து வந்தவர் நடிகர் வடிவேலு. வைகைப்புயல் என்ற பெயர் அவருக்கு வர முழு காரணமாக இருந்தது நடிகர் ராஜ் கிரண் தான். மதுரையில் இருந்து வந்த வடிவேலுவுக்கு சிறுசிறு கதாபாத்திரங்கள் கொடுக்க வைத்துள்ளார் ராஜ் கிரண்.
அதன்பின் விஜயகாந்த் உறுதுணையாக இருந்தும் வாய்ப்புகளை கொடுத்து வடிவேலுவை பெரிய இடத்திற்கு கொண்டு சேர்ந்தார்.அதன் பின் தன் காமெடியால் பலரால் ஈர்க்கப்பட்டு கொடிக்கட்டி பறந்தார்.
இந்நிலையில் ராஜ்கிரண் ஒருசமயத்தில் பொருளாதார நெருக்கடியில் இருக்கும் போது வடிவேலு அவரை சந்தித்து ராஜ்கிரண் கேட்காமலே 5 லட்ச ரூபாயை கொடுத்தார். ஆனால் இதை சொல்லி சொல்லி தம்பட்டம் அடித்திருக்கிறார் வடிவேலு.
வறுமையில் பணத்தை கொடுத்துவிட்டு இப்படி என்னை அசிங்கப்படுத்திவிட்டாரே என்று ராஜ் கிரண் வருத்தப்பட்டும் இருக்கிறார். இப்படியிருக்கும் வடிவேலு சிவகார்த்திகேயன் செய்த செயலை பார்த்து எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று கற்றுக்கொள்ளுங்கள் என்ற விமர்சனமும் எழுந்தது.
மறைந்த நா. முத்துகுமார் குடும்பத்திற்கு சிவகார்த்திகேயன் யாருக்கும் தெரியாமல் மறைமுகமாக உதவிகளை செய்து வந்தார். நா முத்துகுமார் வீட்டினரிடம் இதை யாருக்கும் சொல்ல வேண்டாம் என்று கோரிக்கையும் வைத்திருக்கிறார்.
எப்படியோ இந்த விசயம் லீக்காகி விட்டது. கஷ்டப்பட்டு முன்னேறியவர்களுக்கு தான் அந்த வலி தெரியும். சீனியர் நடிகரான வடிவேலு நடிகருக்கு செய்த உதவியை தம்பட்டம் அடித்த நிலையில் சிவகார்த்திகேயன் வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியக்கூடாது என்பதைப்போல யாருக்கும் தெரியாமல் பல உதவிகளும் செய்து வருகிறாராம்.